பழமை வாய்ந்த விஜயதசமி கும்ப ஊர்வல நிகழ்ச்சி! (திருமலையில் மட்டுமே (பட இணைப்பு) முப்பெரும் சக்தியரை போற்றி வழிபடும் நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமியை முன்னிட்டு இன்று திருகோணமலையில் கும்பம், கரகம் என்பன நகர் உலாவரும் நிகழ்வு பக்தி உணர்வுடன் நடைபெற்றது. ஒன்பது தினங்களாக கும்பத்தில் சக்தியை உட்கார வைத்து பூசை செய்து இன்று கும்பத்தை அலங்காரம் செய்து வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கும்பம் சொரியும் நிகழ்வு நடைபெற்றது. 300 ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலைப் பகுதியில் வாழ்ந்த இந்திய சீக்கிய மதத்தவர்களால் திருகோணமலையில் இந்தக் கும்ப அலங்கார ஊர்வல நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இந்த நிகழ்வு நவராத்திரியின் இறுதிநாளான விஜயதசமி அன்று மிகச்சிறப்பான முறையில் திருகோணமலையில் நடைபெற்று வருகிறது. அத்துடன் இந்துசமய பாரம்பரிய நிகழ்வாக இது உள்ள போதும் உலகின் எப்பகுதியிலும் இந்தக் கும்ப ஊர்வலம் நடைபெறாது. இலங்கையின் திருகோணமலையில் மட்டுமே நடைபெற்று வருவது இதன் முக்கிய சிறப்புக்களில் ஒன்றாகும். திரிபுரன் – திருகோணமலை பழமை வாய்ந்த விஜயதசமி கும்ப ஊர்வல நிகழ்ச்சி! (திருமலையில் மட்டுமே (பட இணைப்பு) முப்பெரும் சக்தியரை போற்றி வழிபடும் நவராத்திரி விழாவின் இறுதி நாளான விஜயதசமியை முன்னிட்டு இன்று திருகோணமலையில் கும்பம், கரகம் என்பன நகர... மேலும் படிக்க»» 10/24/2012