புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



உலகை அச்சுறுத்தி வரும் மிக கொடிய உயிர் கொல்லி நோயான புற்றுநோயை முழுவதுமாக குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.இந்நிலையில் புற்றுநோயை குணப்படுத்தும் புதிய மருந்தை இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். “ஸ்மார்ட் பாம்” என்று பெயரிட்டுள்ள இந்த மருந்து அனைத்து வகை புற்றுநோய்களையும் குணப்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.


கோல்சிசைன் என்ற இந்த மருத்துவ முறை முதலில் எலிகளுக்கு வெற்றிகரமாக பரிசோதிக்கபட்டது. இந்த பரிசோதனை முழு வெற்றி பெற்றுள்ளதாகவும், இதனை தொடர்ந்து அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு சோதிக்கப்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
“ஆன்டம் குரோகஸ்” என்ற ஒருவகை மலரில் இருந்து இந்த மருந்தின் மூலபொருள் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த மருந்து புற்றுநோய் செல்களை முற்றிலுமாக அழித்துவிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வேறு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிவித்துள்ளனர்.மனிதர்களுக்கு அளிக்கப்படும் சோதனை வெற்றிபெறும் பட்சத்தில் இந்த மருந்து இன்னும் 7 ஆண்டுகளில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top