கொழும்பு புறக்கோட்டையில் ஆண்களை ஏமாற்றி பொருட்கள் பறித்த பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கொழும்பு புறக்கோட்டை பஸ் தரிப்பிடங்கள் மற்றும் புறக்கோட்டை பிரதேசங்களில் நடமாடித்திரிந்து ஆண்களோடு நண்பர்களாக பழகியுள்ளனர்.
பின்னர் அவர்களிடமிருக்கும் பணம், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பெறுமதி வாய்ந்த பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.
இவ்வாறு செயற்பட்ட 10 பேரைக் கொண்ட பெண்கள் கொள்ளைக் கும்பலை புறக்கோட்டை பொலிஸார்; கைது செய்துள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் துறை தலைவருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கிணங்க சந்தேகநபர்களை சுற்றிவளைத்துள்ளனர்.
புறக்கோட்டை பஸ் தரிப்பிடங்களில் இரவு வேளைகளில் நிற்கும் ஆண்கள் மற்றும் அப்பகுதி வீதிகளில் பயணம் செய்யும் ஆண்களுடன் நண்பர்களாகிக் கொள்ளும் இப் பெண்கள் அவர்களை ஏமாற்றி விடுதிகளுக்கழைத்துச் சென்று ஒரு நிமிடம் வரை ஒழுங்காக அவர்களுடன் உரையாடலை மேற்கொள்கின்றனர்.
அவர்கள் திடிரென பொலிஸ் பொலிஸ் என குரல் கொடுத்து ஆண்களை பயமுறுத்தி அவர்களிடமுள்ள பணம் மற்றும் பெறுமதி மிக்க பொருட்களை கொள்ளையடித்துச் செல்வதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
அதே வேளை இக் கொள்ளைக் கும்பலில் வேறு சிலர் இரவு வேளையில் புறக்கோட்டை நடைபாதையில் நடந்து செல்லும் ஆண்களுடன் நண்பர்களாக பழகி பாழடைந்த இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையடிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்கள் 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களாகும் என்பதோடு இவர்கள் மொனராகலை, மாத்தறை, காலி, இரத்தினபுரி, வெல்லம்பிட்டிய போன்ற பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
புறக்கோட்டையில் இத்தகைய கொள்ளை கும்பல்கள் இரவு 11 மணிக்கும் 12 மணிக்குமிடையில் நடமாடித்திரிவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றிருப்பதால் பொது மக்களை அவதானத்துடன் இருக்கும் படி பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக