பிரித்தானியாவில் அனுமதிப்பத்திரமின்றி வேலை செய்த இலங்கையைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்மூவரும் பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதற்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள சட்டபூர்வமற்ற வேலையாட்களைப் இனங்காண்பதற்காக பிரித்தானியாவின் செல்ஷயரில் வேலைசெய்பவர்களின் அனுமதிப்பத்திரங்களைத் தேடும் நடவடிக்கை ஒரு வாரமாக இடம்பெறுகின்றது.
இந்தச் சட்ட அமுலாக்கல் நடவடிக்கையானது சட்டபூர்வமற்று வேலைசெய்தல், போலித் திருமணங்கள், போலிக் கல்லூரிகள் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட குடியேற்றக் குற்றங்கள் போன்றவற்றைப் பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையைச் சேர்ந்த நபர் 39 வயதுடைய நபர் ஒருவர் அனுமதியற்றும் விசா முடிந்துவிட்ட நிலையில் சட்டபூர்வமற்று வேலைசெய்துகொண்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவர் விட்னஸ் பகுதியிலுள்ள லிவர்பூல் வீதியில் Booze ‘n’ Food உணவு விடுதியில் பணியாற்றுபவர் என கூறப்பட்டுள்ளது. இதுபோலவே Runcorn இலுள்ள மேலும் இரு கடைகளில் வேலை செய்யும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 37, 23 வயதை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருவருமே விசா முடிந்தபின்னும் அங்கு தங்கியிருந்த்தாகவும் கடைகளில் சட்டபூர்வமற்று வேலைசெய்த்தாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தமது குடிவரவுச் சட்டங்களை அலட்சியப்படுத்தும் எந்தவொரு நபரையும் தாங்கள் அந்நாட்டிலிருந்து வெளியேற்றுவோம் என பிரித்தானியாவின் எல்லைக் கட்டுப்பாட்டின் நடவடிக்கை நிர்வாகி கூறியுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக