நெதர்லாந்து நாட்டில் வீதியால் பரிமாற்றம் செய்வதற்கு பணம் கொண்டு சென்ற போது ஏற்பட்ட தவறு காரணமாக பணம் வீதி எங்கும் பறந்தது . அதாவது நெதர்லாந்து தெற்கு லிம்பேர்க் மாகாணத்தில் எல்ஸ்லு நகரில் உள்ள பெருந்தெரு ஒன்றால் பாரிய கொண்டெய்னர் லொறி மூலம் பரிமாற்றம் செய்ய யூரோ நாணய தாள்கள் கொண்டு செல்லப்பட்டது .
அதன் போது தவறுதலாக கொன்டெய்னரின் கதவு திறந்து கொள்ள, உள்ளிருந்த பணம் காற்றில் கிழம்பி, தெருவில் மழைபோல் பொழிந்தது.வீதியால் சென்றுகொண்டிருந்தவர்கள் அப்படி அப்படியே வாகனங்களை நிறுத்திவிட்டு பணம் பொறுக்குவதில் மும்முரமானார்கள்.
தெரு முழுவதும் பணம் இறைத்து காணப்பட்டது.
பத்து ,இருபது மற்றும் ஐம்பது யூரோ நாணய தாள்களே இவ்வாறு வீணாக்கப்பட்டன.
இது பற்றி அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியொருவர் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில், மேற்படி தொலைந்து போன நாணயங்கள் செல்லுபடியற்றனவாக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக