அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம்.
அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.
கண் நோய்களை குணமாக்கும்
அல்லியின் வேர், கிழங்கு, விதை, பூ போன்றவை மருத்துவ குணம் கொண்டவை. இது துவர்ப்பி,சமனப்படுத்தி, குன்மம்,பேதி, மூலம் போகும், அக்கிப்புண் போகும். நீரிழிவு நோய் குணமாகும். இருதயத்தை பலப்படுத்தும்.
அல்லிப்பூ தாமரையைப் போல் இருந்தாலும் மிகச் சிறியதாக காணப்படுகின்றது. வெள்ளை அல்லிப் பூ தான் அதிக மருத்துவ குணம் கொண்டது. அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள் அல்லி இதழ்களையும், உள்ளேயுள்ள முடிச்சுக்களையும் பச்சையாகச் சாப்பிடலாம். நீரிழிவு உள்ளவர்கள் அல்லிப்பூவில் சர்பத் செய்து சாப்பிட்டால் நோய் கட்டுப்படும்.
அல்லிப் பூவிற்கு நீரிழிவை சீராக்கும் குணம் உள்ளது. இது புண்களை ஆற்றும். வெப்பச் சூட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீர்க்கும். அல்லிப் பூவை அரைத்து சர்பத் செய்து சாப்பிடலாம்.
நினைவாற்றலை அதிகரிக்கும் தாமரை
அல்லியைப் போல தாமரையும் மருத்துவ குணம் கொண்டது. தாமரை மலர் மிகவும் அழகானது. இதன் மத்தியில் சரஸ்வதி வீற்றிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. நினைவாற்றலுக்கு தாமரைப்பூ சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தாமரைப் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை, திரை, மூப்பு ஆகிய மூன்றும் ஏற்படாது. அத்துடன் உயிரையும் வளர்க்கும் என்று சித்த நூல்கள் கூறுகின்றன. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ தாமரைப் பூ மருந்தாகப் பயன்படுகின்றது. வெள்ளைத் தாமரைப் பூவைச் சுத்தம் செய்து குடிநீர் தயாரித்து பருகி வந்தால் இரத்த மூலம், சீதபேதி குணமடையும் என்பர். மூளை வளர்ச்சிக்கு இது முக்கிய மருந்தாகும். இதன் அடிப்படையில் தான் கல்வி வளர்ச்சியும் ஞான வளர்ச்சியும் இருக்கும். தாமரை விதைகளை பச்சையாகச் சாப்பிடலாம். இதைச் சாப்பிட்டால் இரத்த விருத்தி ஏற்படும். உடல் உஷ்ணம் குறையும். பண்டைய எகிப்தியர்கள் வெள்ளைத்தாமரையினை உடல்நலத்திற்காகவும் பாலுணர்வு தூண்டவும் பயன்படுத்தி வந்துள்ளனர். இது இன்றைய வயாக்கராவிற்கு ஈடாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக