எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான மடிக்கணனிகளுடன் நான்கு சந்தேக நபர்களை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்தக் கணனிகள் கடந்த 11ஆம் திகதி வத்தளை கெரவலப்பிட்டிய பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனா்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய பண்டாரகம பிரதேசத்தில் 38 கணனிகளும் அச்சு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களால் இந்தப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் பொருட்கள் கொள்ளையிடப்பட்ட கணனி களஞ்சியசாலையில் சேவையாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேக நபரின் தலைமையிலேயே பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிகள விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக