தீபாவளி என்றாலே பொடிசுகள், இளசுகள், பெருசுகள் என அனைவருக்கும் கொண்டாட்டம் தான். புத்தாடை உடுத்தி, வகைவகையான பலகாரங்களை சாப்பிட்டு, வெடி வெடித்து தீபாவளியை உற்சாகம் பொங்க கொண்டாடுவார்கள்.
அதேபோல் பிரபல சினிமா நட்சத்திரங்களும் தங்களது தீபாவளியை எப்படி எல்லாம்
கொண்டாடுவார்கள் என்று நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்கள் என்ன சொல்கிறார்கள், இதோ...
த்ரிஷா
இந்த வருஷம் எனக்கு தீபாவளி சென்னையில் எனது வீட்டில் தான் கொண்டாடப்போகிறேன். ரொம்ப காலமாக பண்டிகைகளில் கலந்து கொள்ள டைம் இல்லாம... இருந்தேன். இப்ப எனக்கு ஹாலிடே கிடைச்ச மாதிரி இருக்கும். என் வீட்டில் நாய்கள் நிறைய வளர்ப்பதால், வெடிகளே வெடிப்பதில்லை. இந்த வருஷம் ஸ்பெஷல்னு ஒன்னும் இல்லை. அப்பப்ப ஷாப்பிங் பண்ணுவேன், அதனால நிறைய புது டிரஸ் இருக்கு. தீபாவளிக்கு எல்லா நண்பர்களையும் மீட் பண்ண போறேன் என்கிறார்.
தமன்னா
சமீப காலமாக தமிழ் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருக்கும் தமன்னா கூறுகையில், தெலுங்கில் ராம் படத்திற்காக ஸ்விட்சர்லாந்தில் இருக்கேன். அதனால் தீபாவளியை கொண்டாட முடியுமான்னு தெரியல. இருந்தாலும் தீபாவளிக்கு வர முயற்சி பண்றேன். தெலுங்கில் நிறைய படங்களில் பிஸியாக இருப்பதால, பெரும்பாலும் நிறைய பண்டிகைகளை மிஸ் பண்றேன் என்கிறார்.
அனுயா
சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம் உள்ளிட்ட படங்களின் நாயகி அனுயா கூறுகையில், இப்போது மும்பையில் இருக்கேன். தீபாவளி அன்று தான் எனது சொந்த ஊரான புனேவுக்கு போகிறேன். இந்த வருஷம் தீபாவளி ஸ்பெஷல், என் குடும்பத்தோட இருக்கப்போறது தான். ரொம்ப நாள் கழித்து, என் குடும்பத்தோட இருக்கப்போறேன். பொங்கலுக்கு நண்பன் ரிலீஸ் ஆகப்போகுது, அதுக்காகத்தான் இப்ப ரொம்ப காத்துக்கிட்டு இருக்கேன் என்றார்.
ப்ரியாமணி
இந்த வருஷம் தீபாவளிக்கு, என் குடும்பத்தோட பெங்களூர்ல கொண்டாடப் போறேன். புதுசா இரண்டு ஜீன்ஸ் எடுத்திருக்கேன். வெடி, வெடிக்கிற பழக்கம் இல்லை. இந்த தீபாவளி ஸ்பெஷல் என்னென்னா, என் அண்ணன் கொண்டாடும் தல தீபாவளி தான் என்றார்.
சினேகா
இந்த வருஷம் தீபாவளிக்கு என் அக்கா வீட்டிற்கு போய் கொண்டாடப் போறேன். ஓசோன்ல ஓட்டை விழுந்திருக்கு, பல இயற்கை அழிவுகள் நடந்து கொண்டு இருக்கிறது. அதனால வெடி வெடிக்க விருப்பம் இல்லை. ஒரு நாள் டையட் ஏதும் இல்லாம, நல்லா நிறைய ஸ்வீட் சாப்பிடபோறேன். இந்த தீபாவளி ஸ்பெஷல் என்னென்னா, என் அம்மா கல்யாண புடவைய எனக்கு பரிசா கொடுத்திருக்காங்க, ஊதா கலரில் இருந்தது. எனக்காக பச்சை கலரா மாத்தி கொடுத்திருக்காங்க. இது தான் எனக்கு மிகப் பெரிய பரிசா இருக்கு என்றார்.
அஞ்சலி
இந்த வருஷம் தீபாவளிக்கு சென்னையில் என் வீட்டில் தான் இருக்கப் போறேன். 6,7 சல்வார் எடுத்திருக்கேன். இந்த தீபாவளி ஸ்பெஷல் என்னென்னா, சமீபத்தில் என் படங்கள் பெரிய ஹிட்டாகி எனக்கு நல்ல பெயரை கொடுத்திருக்கு, அதனால ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்த தீபாவளி அதனால எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல். நிறைய வெடிக்கு ஆர்டர் பண்ணிருக்கேன். இப்பவே என் அம்மாகிட்ட முறுக்கு, வடை, பாயாசம் எல்லா செய்ய சொல்லியிருக்கேன் என்கிறார்.
லட்சுமிராய்
இந்த வருஷம் தீபாவளிக்கு மலேசியாவில் இருக்கேன். தெலுங்கில் பாலகிருஷ்ணா படத்தில் நடிச்சிட்டுருக்கேன். ஒன்றரை வருஷமா படங்களில் ரொம்ப பிஸி, எந்த பண்டிகையும் கொண்டாட நேரம் இல்லாம ஓடிட்டு இருக்கேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் என இப்ப 3 மொழிகளில் நடிச்சுகிட்டு இருக்கேன். இந்த வருஷம் தீபாவளி ஸ்பெஷல், என் படங்களோட வெற்றி தான் நினைக்கிறேன் என்கிறார்.
கார்த்திகா
இந்த வருஷம் தீபாவளி அப்பா, அம்மாவோட மும்பையில இருக்கப்போறேன். நாங்க எப்பவும் வாராவாரம் ஷாப்பிங் போவோம். குர்தா, ஜீன்ஸ் என்று நிறைய வாங்கியிருக்கேன். பட்டாசுன்னா உயிர், நிறைய வாங்கி வெடிக்கப் போறேன். இந்த வருஷம் தீபாவளி ஸ்பெஷல்ன்னு பெரிசா ஒன்றும் இல்லை. தங்கச்சி பிறந்தநாளுக்குத்தான் நிறைய ப்ளான் வச்சிருக்கேன். இங்கே பாம்பே ஸ்வீட்ஸ் ரொம்ப ஃபேமஸ், அதனால தீபாவளிக்கு நிறைய ஸ்வீட் சாப்பிடப்போறேன். இந்த விஷயத்தை அம்மாகிட்ட சொல்லிடாதீங்க... என்றார்.
அனன்யா
மலையாள படம் குஞ்செழியன் சூட்டிங்கிற்காக பொள்ளாச்சியில் இருக்கேன். தீபாவளி நைட் தான் ஊருக்கே போறேன். எங்க வீட்டுல தீபாவளிக்கு பெரிய கொண்டாட்டம் எல்லாம் இருக்காது. ஓணம் தான் எங்களுக்கு ஸ்பெஷல். அதனால் இந்த தீபாவளிக்கு ஜாலியா ப்ரண்ட்ஸ் வீட்டுக்கு போய் கொண்டாடிவிட்டு வருவேன். வீட்டில ஸ்வீட்ஸ் இருக்கும். சாப்பிட்டு எப்பவும் போல வழக்கமான வேலைகளை பார்க்க தொடங்கிடுவேன் என்றார்.
ஹன்சிகா மோத்வானி
வேலாயுதம் படம் தீபாவளி ரிலீசுக்கு தயார், ஹன்சிகா மோத்வானியும் தீபாவளியை குடும்பத்தாருடன் கொண்டாட தயாராம். தீபாவளிப் பண்டிகையன்று குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருப்பேன். இந்த தீபாவளியன்று அதிர்ஷ்டவசமாக சூட்டிங் எதும் இல்லை என்பது மனதிற்கு மகிழச்சியளிக்கிறது என்கிறார்.
மித்ரா
காவலன் நாயகி மித்ரா கூறுகையில், தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் மாஸ்டர்ஸ் படத்தின் சூட்டிங்கில் உள்ளேன். தீபாவளியன்று மாலை தான் என்னுடைய வீட்டிற்கே செல்வேன். தீபாவளி ஸ்பெஷலாக பாவாடை தாவணி வாங்கி வைத்துள்ளேன். வீட்டிற்கு சென்றதும் புது டிரஸ் போட்டு, ஸ்வீட் சாப்பிட்டு, வெடி, வெடித்து கொண்டாடப்போகிறேன் என்கிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக