புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாளுக்கு நாள் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துபவரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது அதுவும் மின்னல் வேகத்தில். இதனால் பயன் அடைபவர்களும் உண்டு, கேட்டுபோகிறவர்களும் உண்டு. இந்த மாதிரி சமூக வலைதளங்களை பயன்படுத்தினால் மனதில் கொள்ள வேண்டிய மிக முக்கிய ஒன்று, நம்மை 

பற்றி முக்கிய தகவல்களை இங்கு மற்றவர்களுடன் பகிர்வதை தவிர்ப்பது தான்.
பேஸ்புக்கின் தளத்தில் தங்களின் பிரண்ட்ஸ் பற்றி விவரத்தை அனைவரும் அறியும் படி தான் பொதுவாக இருக்கும்.
இதை தாங்கள் மாற்ற விரும்பினால் அதாவது உங்களது நண்பர்களை தெரியாதவர்கள் எவரும் அறிவதை பலரும் விரும்பமாட்டார்கள்.
முதலில் தங்களின் பேஸ்புக் கணக்கில் நுழைந்துக்கொள்ளுங்கள்.
பின்னர் EDIT PROFILE என்பதினை கிளிக் செய்யுங்கள்.
பின்னர் தோன்றும் விண்டோவில் வலதுகை ஓரத்தில் பார்த்தால் சில மெனுக்கள் இருக்கும், அதில் FRIENDS AND FAMILY என்பதனை கிளிக் செய்யவும்.
தற்போது தோன்றும் திரையில் FRIENDS என்பதை கிளிக் செய்யவும். ஓரத்தில் சற்று உற்று கவனித்தால் ஓர் உலக உருண்டை போன்ற ஜகான் ஒன்று இருக்கும், அதை கிளிக் செய்யவும்.
தற்போது சிறிய பாப் அப் விண்டோவை போன்று ஓன்று தோன்றும். அதில் மொத்தம் நான்கு வழிமுறைகள் இருக்கும். முதலில் 1.PUBLIC 2.FRIENDS 3.ONLY ME 4.CUSTOM.
PUBLIC: இதனை தாங்கள் தேர்வு செய்தால் தங்களின் பேஸ்புக்கின் பிரண்ட்ஸ் லிஸ்டை யார் வேண்டுமானலும் காணலாம்.
FRIENDS: இதனை தேர்வு செய்தால் தங்களின் பிரஸ்ட்ஸ் லிஸ்டை தங்களின் நண்பர்கள் மட்டுமே பார்க்க முடியும்.
ONLY ME: இதனை தேர்வு செய்தால் தங்களின் பிரண்ட்ஸ் லிஸ்டை நீங்கள் மட்டுமே பார்க்க இயலும்.
CUSTOM: இதனை தேர்வு செய்து தாங்கள் குறிப்பிடும் சில பேருக்கும் மட்டும் தங்களின் பிர்ண்ட்ஸ் லிஸ்ட் பார்க்கும் மாறு அமைக்கலாம்.
இறுதியாக SAVE CHANGES என்பதனை கிளிக் செய்து தங்களின் மாற்றங்களை தங்களின் கணக்கில் செயல்படுமாறு அமைத்துக்கொள்ளுங்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top