கணினி என்று சொன்னால் நமக்கு முதலில் ஞாபகம் வருவது அதில் நிறுவப்படும் மென்பொருள்கள் தான். இணையத்தில் நாம் அதை தேடி கண்டுபிடித்து நிறுவிக்கொள்வோம்.ஆனால் சில மென்பொருள்களை நாம் தேடுவது சற்று கடினமான விஷயம் அந்த நேரங்களில் நாம் தேடுபொறியின் உதவியை நாடுவோம். ஆனால் சில
மென்பொருள்களை எப்படி தேடுவது என்று நமக்கு தெரியாது அந்த மாதிரியான தருணங்களில் நமக்கு ஒரு தளம் கைகொடுக்கும்.
இதுவும் ஒரு தேடுபொறி தான் ஆனால் இதில் முன்னிருப்பாக பல வகையான ஆன்லைன் சேவைகள் பட்டியலிடப் பட்டுள்ளது. ஒவ்வோற்றின் வகை மற்றும் இயல்பை பொறுத்து வகைபடுத்தப் பட்டு சேவைகள் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
இதில் நீங்கள் எதாவது தேர்வு செய்தால் அதன் வகையை பொறுத்து உங்களுக்கு அதிகமாக பயன்படுத்தபடும் மென்பொருள் அல்லது வலைத்தளம் காண்பிக்கப்படும் அதை வைத்து நீங்கள் தேர்வு செய்யலாம்.
அதுமட்டுமல்ல நீங்கள் இதில் உங்கள் சாதனங்கள் மற்றும் இயங்குதளம் ஆகியவற்றை குறிப்பிட்டும் தேடலாம். நீங்கள் உங்கள் கைபேசிக்கான மென்பொருள் அல்லது உங்கள் ஐ-போனுக்கான மென்பொருள்களை மட்டும் தேடலாம்.
இந்த தளத்தில் ஒரு மென்பொருளை மற்ற மென்பொருளுடன் ஒப்பிட்டு காட்டுகின்றனர். இதில் நீங்கள் குறிச்சொற்கள் கொடுத்தும் தேடலாம் அதற்கும் இந்த நமக்கு உதவுகிறது.
தளத்திற்கு செல்லுவதற்கு
http://catchfree.com/
0 கருத்து:
கருத்துரையிடுக