வயதான பெற்றோரை கைவிடும் இளம் வயதினரை சிறையில் அடைக்கும் புதிய சட்டம் தைவானில் அமலுக்கு வர உள்ளது.சீனாவுடன் மோதி வரும் தைவான் நாட்டில் வயதான பெற்றோரை கண்டுக் கொள்ளாமல் விடும் இளம்வயதினரின் எண்ணிக்கை ஆண்டுத்தோறும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஆண்டுத் தோறும் 65 வயதை தாண்டிய 2,000 பெற்றோர், இளம் வயதினர்
கைவிடப்படுவதாக தெரிய வந்தது.
இந்த எண்ணிக்கை ஆண்டுத் தோறும் 30 சதவீதம் அதிகரித்து வருவதாகவும் அந்த அதிர்ச்சி தகவல் தெரிவித்தது. இதனை தடுக்கும் வகையி்ல் தைவானில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதன்படி வயதான பெற்றோரை கண்டுக் கொள்ளாத இளம்வயதினர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.
இது குறித்து சட்ட வல்லுநர் லாய் சாய் பயோ கூறுகையில், "புதிய சட்டப்படி வயதான பெற்றோரை கண்டுக் கொள்ளாமல் விடும் இளம்வயதினர் மீது வழக்கு பதிவு செய்து 1 ஆண்டு சிறை தண்டனை அல்லது 6,600 டாலர் அபராதம் விதிக்கப்படும். மேலும் வயதான பெற்றோருக்கு தேவையான வாழ்வு ஆதரவு தொகை அல்லது ஒரு பெரும் தொகையோ இளம்வயதினர் அளிக்க வேண்டும் அல்லது முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு அங்கு விதிக்கப்படும் கட்டணத்தை செலுத்த வேண்டும்", என்றார்.
வயதான பெற்றோரை கவனிக்க வேண்டும் என்று இளம் வயதினரை சிங்கப்பூர் அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. தற்போது தைவானும் புதிய சட்டத்தை அமலப்படுத்த முயற்சிகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக