மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு காரணமான அவரது டாக்டர் கன்ராட்முர்ரேவிற்கு என்ன தண்டனை என்பது நாளை (செவ்வாய்) அறிவிக்கப்படவுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி உலகப்புகழ் பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், அவரது பண்ணை வீட்டில் இறந்தார்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் வலிநிவாரணி மருந்தை அதிகம் உட்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது குடும்ப டாக்டரான கன்ராட் முர்ரே,54 கொடுத்த ஆலோசனை தான் மைக்கேல் ஜாக்சன் இறப்பிற்கு காரணம் என கூறப்பட்டு அவர்மீது வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் 12 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு கடந்த 7-ம் தேதி லாஸ்ஏஞ்சல்ஸ் கோர்ட் அவரை குற்றவாளி என கூறியது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான தண்டனை 29-ம் தேதிக்கு (நாளை)ஒத்திவைத்தது. இதைதொடர்ந்து முர்ரே மீதான தண்டனை விபரம் நாளை வெளியாகிறது. இதில் அவருக்கு அதிகபட்ச ஜெயில் தண்டனையும், 100 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்படலாம் என தெரிகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக