மூன்று வயது மட்டுமே நிரம்பிய பெண் சிறுமியான ஒருவர், அவரது தாயார் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டதால், இரண்டு நாட்கள் பூட்டிய வீட்டினுள் தனிமையில் இருந்த சம்பவமொன்று நியூசிலாந்தில் நடைபெற்றுள்ளது.
குளிர்சாதன பெட்டியில் இருந்த பால், சீஸ், லசக்னா என்பவற்றை எடுத்து, பசிவந்த போது
சாப்பிட்டுக்கொண்டு, 'Possum' என்ற தனது செல்லக்கரடி பொம்மையுடன் இரண்டு நாட்கள் பூட்டிய வீட்டின் உள்ளேயே 'ஷைலா' எனும் இச்சிறுமி இருந்திருக்கிறாள். இத்தனைக்கும் தாயார் தூங்கிக்கிகொண்டிருக்கிறார் என்று தான் நினைத்திருக்கிறாள்.
அவளுடைய அங்கிள் பெட் சில்பெரி என்பவர் இரண்டு நாட்களாக அச்சிறுமியின் தாயை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாது போனதால், அதிர்ச்சி அடைந்து, அவர்களுடைய வீட்டிற்கு பக்கத்திலிருக்கும் 28 வயது நிரம்பிய நண்பரிடம் விசாரித்துள்ளார்.
இச்சிறுமியின் வீட்டிற்கு அந்து பார்த்த அந்நண்பர், ஏதோ நடந்திருக்கிறது என ஊகித்து, காவற்துறையினரிடம் கூறி அச்சிறுமியை மீட்டுள்ளார். காவற்துறையினர் வீட்டுக்கு வந்த போது, அச்சிறுமி காஃபி குடிக்கும் மேசையை வீட்டு கதவுக்கு அருகில் கொண்டுவந்து கதவின் லாக்கை திறக்க முயற்சித்திருந்தது தெரியவந்துள்ளது
மேலும் 'தான் எவ்வளவு முயன்றும், தாயார் எழுந்திருக்கவில்லை' என காவற்துறையினரிடம் ஷைலா கூறியுள்ளாள். இந்நிலையில் உடனடியாக ஷைலா மருத்துவமனைக்கு சேர்க்ப்பட்டு, அவர் உடல் நிலை பரிசோதிக்கப்பட்டு, தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டுள்ளன.
பின்பு அவர்களது அங்கிளின் தயவுடன், தாயாரின் இறுதிச்சடங்குகள் முடிவடைந்து, அவரது சடலம் புதைக்கப்பட்டது. எனினும் ஷைலா இன்னமும் அதே 'பப்ளி'யான நிலையிலேயே இருப்பதாகவும், தாயார் புதைக்கப்பட்ட, இடத்தை கை காட்டி, அம்மா அங்குதான் இருக்கிறாரா என அவர் கேட்கும் போது, தம்மால் பதில் சொல்ல கஷ்டமாக இருந்தது எனவும் அவளது அங்கிள் தெரிவித்துள்ளார்.
இந்தவயதிலும் பூட்டிய வீட்டில் இரண்டு நாட்கள் தங்கச்சொன்னால் லேசாக பயம் தொற்றிக்கொள்ளும் எமக்கு. இறந்துவிட்ட தாயாருடன் இரண்டு நாட்கள் இரவும் பகலுமாக காலத்தை ஓட்டியுள்ள இந்த சிறுமியின் சூழ்நிலையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்
0 கருத்து:
கருத்துரையிடுக