பீகாரில் வயதான பெண் ஒருவருக்கு பீடி பற்ற வைக்க உதவுதாகக் கூறி, அவர் வாயில் பட்டாசை வைத்து வெடிக்கச் செய்த நபர், தப்பி ஓடி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.பீகார் மாநிலம் பகல்பூரைச் சேர்ந்தவர் சுககின் தேவி, 65. அதே பகுதியைச் சேர்ந்த ஆஷிக் யாதவ் என்ற நபர், சமீபத்தில் இந்த மூதாட்டியிடம் வந்து, "உங்களுக்கு
பீடி புகைக்க கற்றுத் தருகிறேன்' எனக் கூறி, அந்த பெண்ணின் வாயில், பட்டாசை வைத்துள்ளார்.
அந்த பெண்ணும், அதை நம்பியுள்ளார். இதன் பின், அந்த பெண்ணின் வாயில் இருந்த பட்டாசில், தீயை பற்ற வைத்துள்ளார். அடுத்த வினாடியே, பட்டாசு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அந்த பெண்ணின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆஷிக் யாதவ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். காயமடைந்த பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய ஆஷிக்கை, போலீசார் தேடி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக