புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர்கள், அதை வீடியோ எடுத்துள்ளனர். ஆபாச வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.6 லட்சம் பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
 விழுப்புரத்தை சேர்ந்த வியாபாரி ஒருவரின் மனைவிக்கு ரமேஷ், மகேஷ் ஆகிய இரு இளைஞர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதை அவருக்கு தெரியாமல் வீடியோவும் எடுத்துள்ளனர்.

ஆபாச CDயை பெண்ணிடம் காட்டி ‘ரூ.6 லட்சம் தந்தால் சிடியை கொடுக்கிறோம். இல்லாவிட்டால் இன்டர்நெட்டில் வெளியிடுவோம்’ என்று மிரட்டியுள்ளனர். பயந்து போன அந்தப் பெண் கடன் வாங்கி ரூ.6 லட்சத்தை இருவரிடமும் கொடுத்துள்ளார்.

அவர்கள் கொடுத்த CDயை வீட்டில் போட்டு பார்த்தபோது, மூன்றாவதாக ஒருவரும் தன்னை பலாத்காரம் செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ரமேஷ், மகேஷிடம் கேட்டபோது, ‘அந்த ஆளுக்கும் ரூ.2 லட்சம் கொடுத்து விடு. அவர் வெளியில் யாரிடமும் சொல்ல மாட்டார்’ என்று கூறியுள்ளனர்.


இதனால் மனமுடைந்த அந்தப் பெண், விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிக்கு மனு அனுப்பியுள்ளார். நேரிலும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ், மகேஷ் இரண்டு பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக இருப்பவர் மின்வாரிய ஊழியர் என தெரியவந்துள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top