விதம் விதமாக லண்டனில் உள்ள சவுத்பேங்க் மையத்தில் ‘மரண திருவிழா’ என்ற பெயரில் நடக்கும் 10 நாள் கண்காட்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள விதவிதமான சவ பெட்டிகளை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.இறப்பதற்கு முன்பே
கல்லறை கட்டி வைப்பவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். பிடித்த டிசைனில், பிடித்த கலரில் சவ பெட்டி ஆர்டர் கொடுக்கும் கலாசாரம் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் புதிதாக பரவ ஆரம்பித்திருக்கிறது.
இந்நிலையில், ‘சாவுதானே.. டேக் இட் ஈஸி’ என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் லண்டனில் 10 நாள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சவுத்பேங்க் மையத்தில் இக்கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கி 29-ம் தேதி வரை நடக்கிறது.இங்கிலாந்து மற்றும் ஆப்ரிக்காவின் கானா நாட்டை சேர்ந்த கலைஞர்கள் வடிவமைத்த விதவிதமான சவ பெட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.இதுபற்றி பாரம்பரிய டிசைனில் சவ பெட்டிகள் தயாரித்து வரும் விக் பியர்ன் நிறுவனத்தின் மேனேஜர் டேவிட் கிராம்டன் கூறியதாவது:
‘வழக்கமான சவ பெட்டி வேண்டாம். எனக்கு ஏராபிளேன் என்றால் ரொம்ப பிடிக்கும். அதே போல எனக்கு சவ பெட்டி செய்து கொடுங்கள்’ என்று பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண் ஆர்டர்
கொடுத்தார். அது முதல் படகு, கார், பட்டம், முட்டை என டிசைன்களில் செய்து கொடுத்திருக்கிறோம். ‘உள்பக்கம் சிவப்பு கலர் பார்டர் கொடுங்கள். படுக்கிற இடத்தில் மெத்மெத்தென்று குஷன்,
வெல்வெட் வையுங்கள்’ என்றுகூட சிலர் ஆர்டர் கொடுக்கிறார்கள். மரணம் சாதாரண சம்பவம்தான் என்ற கருத்தை தெரிவிக்கிற வகையிலும் இதுபோன்ற வித்தியாச சவ பெட்டிகளை விளம்பரப்படுத்தும்
வகையில் கண்காட்சி நடக்கிறது.இவ்வாறு கிராம்டன் கூறினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக