புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஒருவரின் காலில் இருந்து 89 கிலோ எடையுள்ள பாரிய கட்டியை அகற்ற அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் போராடி வென்று உள்ளனர்.வியட்நாமைச் சேர்ந்த Nguyen Duy Hai என்பவரின் காலில் நான்கு வயதிலிருந்து பெரிதாக வளர்ந்து வந்த கட்டியை Ho Chi Minh நகரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வைத்து அகற்றியுள்ளனர்.


McKay McKinnon தலைமயிலான அமெரிக்காவைச் சேர்ந்த சிறப்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் குழுவால் பத்து மணித்தியால போராட்டத்தின் பின்னர் பாரிய கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.31 வயதான Nguyen Duy Hai அரிய வகையான பரம்பரைக் குறைபாட்டு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவரது பதினேழு வயதிலும் ஒருதடவை கட்டி பெரிதாகி கால் துண்டிக்கப்பட்டுள்ளது.ஆனாலும் அதன் பின்னரும் காலில் கட்டி வளர்ந்துள்ளது. இதனால் அவரது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

நடப்பது, நித்திரை கொள்வது, காலைக் கடன்களை நிறைவேற்றுவது உட்பட தனது சொந்த வேலைகளைக் கூடச் செய்ய முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தார்.மருத்துவ அறிக்கைகளின் படி இப்படியாக கால்களின் பாரிய வளர்ச்சியானது இதுவரை வியட்நாமில் பதிவு செய்யப்படவில்லையாம்.

இப்படியாக பாரிய கட்டிகளை அகற்றுவது பெரிதும் சவால் நிறைந்த ஒன்று.
சில நேரம் நோயாளியின் உயிருக்கே உலை வைத்து விடும்.

இவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட McKay McKinnon என்ற மருத்துவர் ஏற்கனவே 2004 ஆம் ஆண்டு ரோமானியப் பெண் ஒருவருக்கும் அறுவைச் சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top