மனைவியை அம்மிக்கல்லால் கொன்று, கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மணலி புதுநகர் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே தம்பதி வீட்டில் சிக்கிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி (37). கார்
டிரைவர்.இவரது மனைவி புவனேஸ்வரி (32). இவர்களுக்கு சுஜ்ஜி (9), கிஷோர் (3) என்ற இரு மகன்கள் உள்ளனர். கடந்த 3ம் தேதி, தலையில் அம்மிக்கல்லை போட்டு புவனேஸ்வரி கொல்லப்பட்டு கிடந்தார். மற்றொரு அறையில் ராமமூர்த்தி, தூக்கில் பிணமாக தொங்கினார்.
டிரைவர்.இவரது மனைவி புவனேஸ்வரி (32). இவர்களுக்கு சுஜ்ஜி (9), கிஷோர் (3) என்ற இரு மகன்கள் உள்ளனர். கடந்த 3ம் தேதி, தலையில் அம்மிக்கல்லை போட்டு புவனேஸ்வரி கொல்லப்பட்டு கிடந்தார். மற்றொரு அறையில் ராமமூர்த்தி, தூக்கில் பிணமாக தொங்கினார்.
மணலி புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை வழக்கு பதிந்து விசாரித்தார். இந்நிலையில் ராமமூர்த்தி, அவரது வீட்டில் கைப்பட எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ‘எங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.6 வருடங்கள் நன்றாக வாழ்க்கை ஓடியது. 4 வருடங்களுக்கு முன்பு போலீஸ்காரர் தனசேகர் எங்களது குடும்பத்துக்குள் புகுந்தார். அன்று முதல் புயல் வீசத் தொடங்கியது. எங்களது சாவுக்கு காரணம் தனசேகர்தான் என கூறப்பட்டிருந்தது.
மணலி புதுநகர் காவல் நிலையத்தில் போலீஸ் டிரைவராக வேலை பார்த்து வரும் தனசேகரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தெரிய வந்த பரபரப்பு தகவல்: ராமமூர்த்திக்கு தனசேகர் ரூ.20 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார்.அதை வாங்க அடிக்கடி அவரது வீட்டுக்கு தனசேகர் சென்றுள்ளார். சம்பவம் நடந்த 2ம் தேதி காலையில் கடனை கேட்க சென்றபோது, ‘இன்னும் கொஞ்சம் கடன் தேவைப்படுகிறது, கொடுங்க என்று ராமமூர்த்தி கேட்டுள்ளார். அதற்கு தனசேகர், ‘ஏற்கனவே வாங்கிய கடனை உன்னால் கொடுக்க முடியல.
இன்னும் கடன் கேட்கிறியே, எப்படி திருப்பி தருவாய் என்று கேட்டுள்ளார். இதை கேட்டுக் கொண்டிருந்த புவனேஸ்வரியும், ‘ஏற்கனவே வாங்கிய கடனை கொடுக்கமுடியவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டால் எப்படி என்று தனசேகருக்கு ஆதரவாக பேசியுள்ளார். இது ராமமூர்த்திக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.அன்றிரவு ராமமூர்த்தி வீட்டுக்கு போதையில் வந்தார். ‘போலீஸ்காரனுக்கு ஆதரவாக பேசுகிறாயே என கேட்டுள்ளார்.
இதில் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் வலுக்க ஆத்திரத்தில் அம்மிக்கல்லை போட்டு புவனேஸ்வரியை கொலை செய்து விட்டு ராமமூர்த்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக