புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மிகப் பழமை வாய்ந்த 10 வெண்கல விக்கிரகங்கள் முள்ளியவளை கணுக்காய் கேணி கற்பக விநாயகர் ஆலையத்தில் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மேற்படிப் பிரதேசத்தில், கடந்த 23 ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஆலையக் கதவினை உடைத்து விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளது.

அண்மையில் கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்த இவ்வேளை, சிவன், பிள்ளையார், முருகன், வள்ளி, தெய்வானை, சன்டேஸ்வரர், வைரவர் உட்பட சுமார் 10 விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளது. இவை சுமார் 35 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதி கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் படைமுகாங்கள் அதிகமான உள்ள இப்பகுதியில், மேற்படி ஆலையத்தின் கதவினை உடைத்து பெரும்பாலன விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top