ஆழ்கடலில் ஆபத்தில் சிக்குபவர்களுக்கு உடனடியாக உதவும் பொருட்டு ஜெல்லி மீனை அடிப்படையாக கொண்டு ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வர்ஜீனியா டெக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு பயன்பாட்டுக்கு
ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஆழ்கடல் குறித்து ஆராய்ச்சி செய்பவர்கள் ஆபத்தில் சிக்கி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் நவீன ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:

ஜெல்லி மீனை அடிப்படையாக கொண்டு, ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் புதிய ரோபோவை உருவாக்கி இருக்கிறோம். இது கடலில் மிக வேகமாக ஜெல்லி மீனை போலவே இயங்கும். ஆழ்கடல் பகுதிக்கு விரைவாகவும் எளிதாகவும் செல்ல கூடியது. இதற்கு ரோபோ ஜெல்லி என்று பெயரிட்டுள்ளோம்.
கடலில் ஆழத்தில் ஆபத்தில் உள்ளவர்களை உடனடியாக காப்பாற்றும் வகையில் ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட ஆய்வு மற்றும் பரிசோதனையில் எதிர்பார்த்த வெற்றி கிட்டி உள்ளது. தேவைக்கேற்ப இதில் மாற்றம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக