புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ்ப்பாணத்தில் தற்போது பஞ்சம் தலைவிரித்தாட ஆரம்பித்துள்ளது. அதுவும் அண்மையில் எரிபொருளுக்கான விலை அதிகரிக்கப்பட்டதிலிருந்து அன்றாடம் உழைத்து வாழ்க்கையைக் கொண்டு செல்லும் யாழ்ப்பாண மக்களின் நிலையோ கவலைக்கிடமாகி
விட்டது.இந் நிலையால் களவுகள் அதிகரிக்கப்பட்டு களவு எடுப்பவர்கள் முதல் களவு கொடுப்பவர்கள் வரை அனைவரும் ஒரு நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வருகின்றனர்.

இத்தகைய களவுகளைத் தடுப்பதற்குப் பலர் தங்களாளான முழு உத்திகளையும் பயன்படுத்தி தமது பொருள்களைப் பாதுகாத்து வருகின்றனர்.

அந்த வகையில்தான் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் தனது செருப்புக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவோ அல்லது ஒன்றை ஒன்று பிரிந்து விடாமல் இருப்பதற்காகவோ என்னவோ தெரியாது தனது இரு செருப்புக்களையும் கயிறு ஒன்றினால் இணைத்துக் கட்டியுள்ளார்.

இந்தச் செருப்புக்கே இத்தகைய பாதுகாப்புத் தேவைப்படும் நிலையில் ஏனைய பொருட்களின் பாதுகாப்புக்கு யாழ்ப்பாணத்து மக்கள் என்னவெல்லாம் செய்யவார்கள் என்பதை இப் புகைப்படத்திலிருந்து நீங்கள் ஊகித்துக் கொள்ள முடிகிறதல்லவா?

எனவே தங்களின் பொருள்களைப் பாதுகாத்துக் கொள்வதில் ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய போராட்டத்தையே சந்தித்து வருகின்றனர் யாழ்ப்பாணத்து மக்கள்.

இந்தச் செருப்புத் தொலைந்து விட்டாலோ அல்லது ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து விட்டாலோ இன்னொரு புதிய செருப்பு வாங்குவதற்குக் கூட யாழ்ப்பாணத்து மக்கள் வசதியற்றவர்களாகி விட்டனர் என்பது இதிலிருந்து தெட்டத் தெளிவாகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top