புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

புவியின் துணைக்கோளான சந்திரனை ஆய்வு செய்வதற்காக மூன்றாவது முறையாக விண்கலத்தை அனுப்ப சீனா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சீன விண்வெளித்துறை அதிகாரி யே பெய்ஜியான் கூறுகையில், சங் இ-3 என்ற விண்கலத்தை அடுத்த ஆண்டு சந்திரனுக்கு அனுப்ப
திட்டமிட்டுள்ளோம்.இந்த விண்கலம் இதற்கு முன் அனுப்பிய இரண்டு விண்கலத்தை விட அதிக சிறப்புகளுடன், சந்திரனில் இறங்குவதற்கு வசதியாக மூன்று கால்கள் கொண்ட அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் இந்த விண்கலத்தில் சந்திரனில் இறங்கி ஆராய்ச்சி செய்வதற்கு வசதியான சிறிய வாகனம், ஆராய்ச்சி மேற்கொள்வதற்குத் தேவையான சாதனங்கள் போன்றவை இருக்கும். சந்திரனில் நீண்ட இரவும், கடுமையான குளிரும் காணப்படும்.சுமார் மைனஸ் 170 டிகிரி செல்சியஸ் வரை தாங்கக் கூடிய அளவில் விண்கலம் இருக்க வேண்டும் என்பதற்காக விண்கலத்தில் சோலார் விங் பொருத்தப்பட்டுள்ளது. இது பகலில் சூரியக்கதிர்களில் இருந்து தேவையான ஆற்றலைப் பெற்று அதனை இரவில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

100 கிலோகிராம் எடை உள்ள இந்த விண்கலம் சுமார் மூன்று மாத காலம் சந்திரனில் தங்கி இருந்து தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். புவியிலிருந்து விண்கலத்தை கட்டுப்படுத்தும் வகையில் தொழில்நுட்பக் கருவிகள் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளன.முதன் முதலில் சீனா சங் இ-1 என்னும் விண்கலத்தை 2007ம் ஆண்டு சீனா சந்திரனுக்கு அனுப்பியது. இது சந்திரனைப் பற்றிய பல முக்கிய தகவல்களுடன், அதன் முழு வரைபடத்தையும் படம் பிடித்து வந்தது.

அதனையடுத்து சங் இ-2 என்னும் விண்கலத்தை 2010ம் ஆண்டு அனுப்பியது. இது துல்லியமான சந்திரனின் வரைபடம் மற்றும் இரிடியம் தனிமத்தின் படிவங்களையும் படம் பிடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top