புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காதல் விவகாரத்தனால் பருத்தித்துறை, தும்பளையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,


கண்டியிலிருந்து வந்த இளைஞர்கள் சிலரால் பருத்துறை,  தும்பளையைச் சேர்ந்த இளம் பெண் கடத்திச் செல்லப்பட்டு கொடிகாமம் பகுதியில் வைத்து மீட்கப்பட்டிருக்கின்றார்.

எனினும் இந்தச் சம்பவம் ஒரு காதல் விவகாரம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதாவது, தும்பளை பகுதியிலுள்ள இளம்பெண்னொருவரை கயஸ் வாகனத்தில் வந்த இளைஞர்கள் சிலர் வாகனத்தில் தூக்கிப் போட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து குறித்த பெண்ணின் உறவினர் அவசர பொலிஸ் உதவியை (119) நாடியுள்ளனர். இந்த அறிவிப்பையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் குறித்த வாகனத்தை கொடிகாமத்தில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளனர்.

குறித்த பெண்ணுக்கும், கண்டியிலுள்ள ஆணுக்கும் இடையில் ஏற்பட்ட காதலையடுத்து அவர்கள் இருவரின் சம்மதத்துடனேயே இந்த கடத்தல் நாடகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top