YouTubeபில் பதிந்து வைத்துள்ள வீடீயோ கிளிப்கள் எதைப் பார்த்தாலும், உடனே அதனை டவுண்லோட் செய்து இறக்கி வைத்துக் கொள்ள ஆசையாக இருக்கும். இதற்காகவே பல YouTube டவுண்லோட் புரோகிராம்கள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.
இவற்றில் பல கண்டிஷன்கள் இருக்கும். சில 60% மட்டுமே டவுண்லோட் செய்திடும். சில 10 அல்லது 20 முறை மட்டுமே டவுண்லோட் செய்திட அனுமதிக்கும். சில குறிப்பிட்ட நாள் வரை மட்டுமே இயங்கும். அல்லது கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.
இவற்றின் மூலம் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே டவுண்லோட் செய்திட முடியும். ஒரே நேரத்தில் பல YouTube வீடியோக்களை முழுமையாக டவுண்லோட் செய்திடும் வகையில் இணையம் ஒன்று கிடைக்கிறது.
இதன் பெயர் 1Click YouTube Batch Downloader இதனை Eurekr.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். ஒன்றுக்கு மேற்பட்ட YouTube வீடியோக்களை, அவற்றின் இணையதள முகவரி சென்று தேடிப் பெற்று காப்பி செய்வதனைக் காட்டிலும், இதன் மூலம் ஒரேகிளிக்கில் காப்பி செய்திடலாம்.
அது மட்டுமின்றி, இந்த வீடியோக்களை mp4, wmv, மற்றும் mov என்ற பார்மட்டுகளுக்கு மாற்றவும் இந்த புரோகிராம் உதவுகிறது. அத்துடன் பல வீடியோ பைல்களை ஒரே பைலாக மாற்றும் வசதியையும் இது தருகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக