கொழும்பு கொம்பனித்தெருவைச் சேர்ந்த நபர் ஒருவர் திருமணமான தனது மகளை நிர்வாணப்படுத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டுக்காக கொழும்பு நீதிமன்றம் 3மாத சிறைத் தண்டனையும் 1500 ரூபா அபராதமும்
விதித்துள்ளது.
திருமணமான மேற்படி பெண், தன்னை தனது தந்தை நிர்வாணமாக்கி துன்புறுத்துவதாக கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்திருந்தார்.
குறித்த நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்தே கொழும்பு கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரட்ண நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, குற்றம்சாட்டப்பட்ட நபர் அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு மாதகாலம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதவான் உத்தரவிட்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக