புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தா.பேட்டை அடுத்த சோளம்பட்டி கிராமத்தில் சோழராஜா கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் விழா கொண்டாடப்படும். அப்போது விழா முடிந்த மறுநாள் பெண்களுக்கு பேய் விரட்டும் நிகழ்ச்சி நடைபெறும். இதையொட்டி சோழராஜா,
பெரியக்காள், வீரபத்திரன், அத்தைபிள்ளை அத்தா, பெரியநாச்சி, தங்கா, ஆரியராஜா உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

நேற்று சோழராஜா கோயில் முன்பு 50க்கும் அதிகமான பெண்கள் தலைவிரி கோலமாக அமர்ந்திருந்தனர். கோயில் பூசாரிகள் அவர்களின் முகத்தில் தண்ணீர் தெளித்து ஊதுபத்தி புகை காட்டி பேய் பிடித்துள்ளதா என கேட்டனர். அமைதியாக தெளிவாக பதில் கூறிய பெண்களுக்கு பூசாரிகள் தீர்த்தம் தெளித்து ஆசி வழங்கி அனுப்பினர். பேய் பிடித்திருப்பதாக கூறி ஆடிய சில பெண்களுக்கு, உடுக்கை, விசிலடித்து பேய் விரட்டினர். அந்த பெண்களின் தலைமுடியை எடுத்து முடிச்சுபோட்டு அந்த முடியை மட்டும் அப்பகுதியில் இருந்த புளிய மரத்தில் அடித்து வருமாறு கூறி அனுப்பினர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top