சுவிட்சர்லாந்தில் Exit மற்றும் Dignitas என்ற பொதுநல நிறுவனங்கள் தன்னுயிரை மாய்த்துக் கொள்வோருக்கு தனிமனித உரிமைப்படி மருத்துவ ரீதியாக உதவுகின்றன. தற்கொலைச் சுற்றுலாவும் சுவிட்சர்லாந்தில் நடைபெறுகின்றது. ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனிலிருந்து அதிக எண்ணிக்கையில் சுவிட்சர்லாந்துக்கு வந்து தம்
இன்னுயிரை மருத்துவ ரீதியாக மாய்த்துக் கொள்கின்றனர்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் தற்போது குறைந்து வருவதாகவும் அதனால் சீர்திருத்தங்கள் எதுவும் இதில் தேவையில்லை என்றும் சட்ட அமைச்சர் சிமோனெட்டா சொம்மாருகா தெரிவித்தார்.
கடந்த 2006ம் ஆண்டில் 199 வெளிநாட்டவர் சுவிட்சர்லாந்துக்கு சாவதற்காக வந்தனர். கடந்த 2010ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 97 ஆகக் குறைந்து விட்டதாக Le Matri பத்திரிகை தெரிவிக்கின்றது.
கடந்த மே மாதம் நடத்திய பொது வாக்கெடுப்பில் மக்கள், தற்கொலைச் சுற்றுலா மற்றும் தற்கொலைக்கு உதவுதல் ஆகிய இரண்டையும் தடை செய்ய வேண்டாம் என்றனர்.
2,78,000 பேரிடம் எடுத்த வாக்கெடுப்பில் 85 சதவீதம் தற்கொலைக்கு உதவுவதை ஆதரித்தனர். 78 சதவீதம் பேர் தற்கொலைச் சுற்றுலாவை ஆதரித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக