புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் முஸ்லிம் மத தலைவர் ஒருவரின் மகனை வாலிபர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.


பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும் மதத் தலைவரின் 3 மகள்கள் கடைக்குச் சென்றுவிட்டு கடந்த புதன்கிழமை இரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அதில் இருவருக்கு கடந்த வியாழக்கிழமை திருமணம் நடப்பதாக இருந்தது. அவர்கள் பைசலாபாத் மாவட்டத்தில் உள்ள நவான் லாகூர் பகுதியில் சென்று கொண்டிருக்கையில் 5 வாலிபர்கள் அவர்களை தாக்கினர்.
அப்போது 2 சகோதரிகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் சென்று ஒளிந்துகொண்டனர். ஆனால் சகோதரிகளில் ஒருவரான ராஹிலா மட்டும் தனியாக மாட்டிக் கொண்டார். அந்த வாலிபர்கள் ராஹிலாவை கற்பழிக்க முயன்றனர். பின்னர் அவரது ஆடைகளை கிழித்தெறிந்துவிட்டு நிர்வாமணாக்கி ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். யாராவது அவரை காப்பாற்ற வந்தால் அவருக்கும் இதே கதி என்று மிரட்டனர்.

முன்னதாக அந்த 5 வாலிபர்களில் ஒருவர் ராஹிலாவின் சகோதரர் தனது சகோதரியை கிண்டலடித்ததாகக் குற்றம்சாட்டினார். இதையடுத்து மதத் தலைவரின் மகனை 2 ஆண்டுகள் கிராமத்திற்குள் வரக்கூடாது என்று உள்ளூர் பெரியவர்கள் உத்தரவிட்டனர்.
ஆனால் தலைவர் மகன் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தெரிந்த பிறகு அவரை ஊரைவிட்டு வெளியேற வேண்டாம் என்று தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த அந்த வாலிபர் இன்னும் 4 பேருடன் சேர்ந்து தலைவரின் மகன் மீதுள்ள காட்டத்தால் அவரின் சகோதரி ராஹிலாவை அவமானப்படுத்திவிட்டார்.
இதையடுத்து அந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top