புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


"நான் என்னோட புருஷனையும், பிள்ளையும் விட்டுட்டு இன்னோரு பையனோட வந்துட்டேன். 15 நாள் ஆச்சு" என்று கொஞ்சம் கூட தடுமாற்றமில்லாமல், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தார் இளம் பெண். ஏதோ தோசை சாப்பிட்டேன் ஏப்பம் வந்திச்சு என்கிற ரீதியில் அவர் பேசுவதைக் கேட்க நமக்குத்தான்
அதிர்ச்சியாக இருந்தது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் கள்ளக்காதலும், கொலையும், துரோகமும், கண்ணீரும்தான் பகிர்ந்துக்கொள்ளப்படுகின்றன. இந்த ரியாலிட்டி ஷோவில் அடுத்தவரின் கண்ணீர் நமக்கு பொழுதுபோக்கு என்கிற ரீதியில் போய்விட்டது.

சில தினங்களுக்கு முன் திருப்பூரைச் சேர்ந்த 20 வயது பெண் பங்கேற்றார். தந்தையும் தாயும் பிரிந்து வேறு வேறு வாழ்க்கையைத் தேடிப் போகவே தந்தையிடம் சில நாள், தாயிடம் சில நாள் வாழவேண்டியதாயிற்று குழந்தைகள். இரண்டு பெண் ஒரு ஆண் என மூன்று குழந்தைகளை விட்டு பிரிந்த பெற்றோர்கள், பிள்ளைகளின் வாழ்க்கையைப் பற்றி நினைக்காமல் வேறு திருமணம் செய்து கொண்டனர்.

தாயை மறுமணம் செய்தவன் விட்டு ஓடிப்போகவே தாயின் வாழ்க்கை நடுத்தெருவில். இதனால் தந்தையிடம் தஞ்சம் புகுந்தனர் பிள்ளைகள் மூவரும். முத்தபெண்தான் தற்போது நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்பாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருக்காங்க அவங்களை விட்டுட்டுதான் எங்கப்பாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க என்று அதிர்ச்சித் தகவலை சொன்ன அந்தப் பெண், தனது சித்தியே தன்னை காதலிக்க தூண்டிவிட்டதாக முதலாவதாக குண்டைப் போட்டார்.

காதலித்து திருமணம் செய்த வாழ்க்கையில் நிம்மதியில்லை. கணவரின் சகோதரர்களின் பாலியல் டார்ச்சர், கணவனின் சந்தேகம், அதனால் அடி உதை போன்ற கொடுமைகளுக்கு ஆளானதாக கூறினார். குழந்தை பிறந்த பின்னர் நகை, பணம் கேட்டு தொந்தரவு செய்து விரட்டி விட்டனர்.

இதனால் புருஷனையும் குழந்தையையும், விட்டுட்டு பக்கத்து வீட்டுப்பையனுடன் 15 நாளைக்கு முன்பு ஓடி வந்து விட்டேன் என்று கேஷூவலாக சொல்லிக்கொண்டே வந்தார். இதைக்கேட்டு கொஞ்சம் கூட அதிர்ச்சியடையாத நிர்மலா பெரியசாமி, இது செல்லாத கல்யாணம். நீ எப்படி 20 வயசுல இது போல காரியத்தை செய்தே என்று சொன்னார்.

சரி நிகழ்ச்சிக்கு வருவோம் இந்தப்பெண் இந்த அளவிற்கு வந்து டிவியில் பேசுவதற்குக் காரணம் அவரது தங்கைதான். தங்கைக்கு 18 வயது ஆகிறது. அவளும் இப்போது காதலிக்கிறாளாம். நான் காதலித்து என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது. அவளை காதலிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறுங்கள் என்பதற்காகவே உங்களிடம் அழைத்து வந்தேன் என்று கூறுகிறாள் அந்த சின்னப்பெண்.

உடனே நிர்மலா பெரியசாமி அந்தப் பெண்ணைப் பார்த்து, காதல்னா என்னம்மா? அதற்கு அர்த்தம் தெரியுமா? என்று கேட்கவே, அந்த பெண் எதுவும் சொல்லாமல் சிரிப்பை மட்டுமே பதிலாக தருகிறாள்.

பெற்றோர்கள் தடம்மாறிப் போனதால் பிள்ளைகளின் வாழ்க்கை எந்த அளவிற்கு தடுமாறிப்போகிறது. என்று சொல்லாமல் ‘சொல்லியது சொல்வதெல்லாம் உண்மை

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top