இன்சூரன்ஸ் பணத்திற்காக 10வது கணவனை எரித்துக் கொன்ற அமெரிக்க பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஜில்மர் பகுதியைச்
சேர்ந்தவர் ஷரோன் மேக்ஸ்வெல்(வயது 44).இவர் ஏற்கனவே ஒன்பது முறை திருமணமாகி, விவாகரத்து பெற்றவர். இவரது 10வது கணவர் கார்டன் மேக்ஸ்வெல். இவர் 1.75 லட்சம் அமெரிக்க டொலருக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தார்.
மற்றொரு நபருடன் கள்ள உறவு வைத்திருந்ததை அறிந்த மேக்ஸ்வெல், ஷரோனை விவாகரத்து செய்ய திட்டமிட்டிருந்தார். கணவர் விவாகரத்து செய்வதற்கு முன்னதாக அவரை தீர்த்து கட்டி இன்சூரன்ஸ் தொகையை அபகரிக்கத் திட்டமிட்டார் ஷரோன்.எனவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஓரி நகரில் காதலனுடன் சேர்ந்து மேக்ஸ்வெல்லை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றார் ஷரோன்.
இது குறித்து பொலிசார் விசாரித்த போது தனது 19 வயது மகன் ஜேம்ஸ் கணவர் மேக்ஸ்வெல்லை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தீ வைத்ததாக ஷரோன் நாடகமாடினார்.சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தியதில் மேக்ஸ்வெல்லின் 1.75 லட்சம் டொலர் இன்சூரன்ஸ் பணத்துக்காக அவரை கொலை செய்த விஷயம் அம்பலமானது. இதனையடுத்து ஷரோனை பொலிசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஜில்மார் மாவட்ட நீதிமன்றம் உள்நோக்கத்துடன் கணவனை கொலை செய்த ஷரோனுக்கு, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.2042ம் ஆண்டு வரை அவர் பரோலில் வெளிவர முடியாது. அது மட்டுமல்லாது 10 ஆயிரம் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:
கருத்துரையிடுக