புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ள முஸ்லிம்கள் மினா நகரில் சாத்தான் மீது, கல்லெறியும் சடங்கை நேற்று துவக்கினர்.

முஸ்லிம்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். பக்ரீதையொட்டி ஐந்து நாள் புனித பயணம் சவுதியில் நேற்று துவங்கியது.

189 நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள், சவுதியில் குவிந்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை, 20 லட்சம். நேற்று முன்தினம், முஸ்தாலிபா நகரில் கற்களை சேகரித்த ஹஜ் பயணிகள் நேற்று மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் சடங்கை நிறைவேற்றத் துவங்கினர்.

சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது, கடந்த ஆண்டுகளில் நெரிசலின் காரணமாக அசம்பாவிதங்கள் நடந்தன. யாத்திரிகர்கள் பலர் பலியாகினர். இந்த அசம்பாவிதங்களை தவிர்க்க சவுதி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சாத்தான்களாகக் கருதப்படும் ஐந்து தூண்கள் உள்ள பகுதியில் பக்தர்கள் ஒவ்வொருவராக வரிசையில் அனுப்பப்படுகின்றனர். கூடாரங்களும் தீப்பிடிக்காத வகையில் அமைக்கப் பட்டுள்ளன. இந்த கூடாரங்களில் தீப்பிடிக்கும் பொருட்களை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top