பிரித்தானியாவில் முன்னணி பாண் விற்பனை செய்யும் நிறுவனம் எது என்று கேட்டால் சிறு பிள்ளையும் சொல்லும் அது கிங்ஸ் மில் என்று. அவ்வளவு தூரம் பாண் மற்றும் உணவுப் பண்டங்களை விற்பதில் இவர்கள் பிரபல்யமானவர்கள். பல ஆண்டுகளாக மற்றும் பரம்பரை
பரம்பரையாக இவர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிறுவனம் ஆண்டுதோறும் பல மில்லியன் ரூபாய்களை விளம்பரத்துக்காக செலவுசெய்து வருகிறது. சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான இந் நிறுவனத்தின் விளம்பரத்தால் பெரும் சர்ச்சை தோன்றியுள்ளது. பருவ வயது பள்ளி மாணவி ஒருவர் குட்டையான பாவாடை ஒன்றை அணிந்து சேட் பட்டன்கள் திறக்கப்பட்ட நிலையில், பாணை உட்கொள்வது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.
4 மில்லியன் பவுண்டுகள் செலவில் இந்த 30 செகன் விளம்பரத்தை ஒளிபரப்ப விருக்கிறது இந் நிறுவனம். ஆனால் இதில் உள்ள பெண் மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும். வழமைக்கு மாறாக அவர் குட்டையான பாவாடையை அணிந்துள்ளார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த விளம்பரத்தை பள்ளி மாணவிகள் பார்த்தால், அவர்களை இது தூண்டிவிடும் செயலாக அமையும் என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இவர் அணிந்துள்ள ஆடை எந்தப் பள்ளியின் சீருடை என்பதிலும் சர்சைகள் தோன்றியுள்ளது. இதனையடுத்து தாம் தயாரித்த விளம்பரத்தை போடுவதா விடுவதா என்று தலையைப் பிய்த்துக்கொள்கிறார்கள் கிங்ஸ் மில் உரிமையாளர்கள்.
அது சரி பள்ளி மாணவி ஒருவரை, அப்படிப் பார்க்காமல் நீங்கள் ஏன் ஆபாசமாகப் பார்கிறீர்கள் என்று சிலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். மாணவிகள் குட்டையான பாவாடை அணிவது பிரித்தானியாவில் வழக்கமாகிவிட்டது. ஆனால் இதில் மேலதிக விடயம் ஒன்றும் உள்ளது. பெற்றோர் மாணவிகளுக்கு பாவாடை வாங்கும்போதோ இல்லை தைக்கும்போதோ நீளமாகத் தான் தைத்து கொடுக்கிறார்களாம். (அது முழங்கால் வரைக்கும் இருக்கும் ). ஆனால் மாணவிகள் அதனை வீட்டில் போட்டுக்கொண்டு, வெளியே வந்தவுடன் , இடுப்பில் இருந்து அதனை மடித்து , மடித்து பாவாடையைக் குள்ளமாக்கி விடுகின்றனராம். அப்ப தான் சக மாணவர்கள் அவர்களைப் பார்ப்பார்கள் என்று இவர்கள் நம்புகிறார்கள். இது தான் நடக்கிறது. பின்னர் வீட்டிற்கு வரும்வேளை இடுப்பில் உள்ள மடிப்பை இறக்கினால் போதும், பாவாடை மீண்டும் நீளமாக மாறிவிடும் …… இது எப்படி இருக்கு ?
0 கருத்து:
கருத்துரையிடுக