பாணந்துறையில் வீடொன்றில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன
பாணந்துறை வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாணந்துறை கடற்கரை வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து
கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் மூன்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடையவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவரை அடுத்து குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸார் குறித்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ஆண் தூக்கிட்ட நிலையிலும் பெண் கதிரையில் அமர்ந்திருந்த நிலையில் இறந்தும் குழந்தை மெத்தையில் உயிரிழந்த நிலையிலும் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையுடைய சடலங்களே கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு சில தினங்களுக்கு முன்னர் இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என நம்புவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மூவரதும் மரணத்திற்கான உரிய காரணத்தை பிரேத பரிசோதனைகளின் பின்னரே கண்டறிய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக