புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கட்டையால் அடித்து மருமகளை கொலை செய்த மகனை போலீசில் தாய் ஒப்படைத்தார். மதுரவாயலில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் அடுத்த மேட்டுகுப்பம் சக்திவேல்நகர் 2வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (38). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கவிதா (28).

தம்பதிக்கு மணிகண்டன் (9), சதீஷ் (7) ஆகிய மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கம் கொண்ட கார்த்திக் சரியாக வேலைக்கு போகாமல் சுற்றி திரிந்துள்ளார். குழந்தைகளின் படிப்பு பாதிக்க கூடாது என்பதற்காக கவிதா அவர்களை ஓசூரில் உள்ள அம்மா உண்ணாமலை வீட்டிற்கு அனுப்பி விட்டார்.

வீட்டின் எதிரே அவரது அம்மா ராஜாமணி, அக்கா பவானி ஆகியோர் வசிக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கார்த்திக் குடித்து விட்டு மனைவியை உருட்டு கட்டையால் அடித்துள்ளார்.

காயம் அடைந்த கவிதாவை சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். கட்டிடவேலை செய்யும்போது சாரம் சரிந்து தலையில் விழுந்து விட்டது என்று கார்த்திக் கூறியிருக்கிறார். அம்மா ராஜாமணிக்கு இந்த விவகாரம் தெரியவந்தது. நேற்று சிகிச்சை பலனின்றி கவிதா இறந்தார். மருத்துவமனைக்கு வந்த ராஜாமணி, என் மகன் கவிதாவை அடித்து கொலை செய்து விட்டான்.

போலீசை பிடிச்சுட்டு போகச்சொல்லுங்க என்று புலம்பியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்தும் மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வார்டிற்கு வந்தனர். அங்கிருந்து தப்பியோட முயன்ற கார்த்திக்கை பிடித்து கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மனைவியை கார்த்திக் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top