புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள விபுலானந்தபுரத்தில் 10 மாத குழந்தை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் மீது சந்தேகம் வலுத்துள்ளதால் அவர் கைது
செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் அளவில் விபுலானந்தபுரம் கிராமத்திலுள்ள கிணறு ஒன்றிலிருந்து 10 மாத ஆண் குழந்தையின் சடலமொன்று ஏறாவூர் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.

குழந்தையை தான் தொட்டிலில் உறங்க வைத்து விட்டு வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்ததாகவும், பின்னர் குழந்தை காணாமல் போய்விட்டதாகவும், தேடிப்பார்த்த போது குழந்தை வேறொரு வளவுக்குள் இருந்த கிணற்றில் சடலமாகக் கிடப்பதைக் கண்டதாகவும் குழந்தையின் தாய் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும் குழந்தையின் தாயான அருளானந்தம் ஜெயலலிதா (வயது 32) கூறிய வாக்குமூலத்தின் பிரகாரம் அவர் மீதே சந்தேகம் வலுத்துள்ளதால் தொடர்ந்து விசாரணைக்குட்படுத்தப்பட்டதின் பிரகாரம் அவரை கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிறு மாலை கைது செய்யப்பட்ட அவரை இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தாம் எடுத்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top