புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், முன்னாள் CEO-வுமான ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) மறைவுக்குப் பின் ஆப்பிள் நிறுவனம் சிறிது தடுமாறியது. தற்போது ஆப்பிள் நிறுவனத்தில்
புதுமை (Innovation) இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையெல்லாம் கருத்தில் கொண்டு முதன்முறையாக தனது ஐஓஎஸ் 7-ஆம் பதிப்பில் இயங்குதள தோற்றத்தை முழுமையாக மாற்றியுள்ளது டிம் குக் (Tim Cook) தலைமையிலான ஆப்பிள் நிறுவனம்.

சிறப்பம்சங்கள்:


iOS 6 vs iOS 7
Control Center - Airplane Mode, Wi-fi, Bluetooth போன்ற பொதுவான அமைவுகளை உடனடியாக செயல்படுத்த உதவுகிறது. திரையில் கீழிருந்து மேலே நகர்த்தி இதனை பயன்படுத்தலாம்.
Notification Center - புதிய மெயில்கள், Missed Calls மற்றும் அப்ளிகேசன்களின் அறிவிப்புகளை காணலாம். இதனை பயன்படுத்த திரையில் மேலிருந்து கீழே நகர்த்தவும்.
Camera - சாதாரண புகைப்படம், வீடியோ, பனோரமா புகைப்படம், சதுர அளவிலான புகைப்படம் என்று நான்கு வகை அமைவுகள் இருக்கிறது. மேலும் புகைப்படத்திற்கு வண்ணங்கள் கொடுக்க எட்டு Filters இருக்கிறது.
Photos -நீங்கள் எடுத்துள்ள புகைப்படங்களை Moments, Collections, Years என்று மூன்றுவிதமாக பிரித்துப் பார்க்கலாம். உதாரணத்திற்கு 2012 என்பதை தேர்வு செய்தால் அந்த வருடம் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும் திரையில் காட்டும்.
Find My iPhone - தொலைந்து போன ஐபோன்களை கண்டுபிடிக்க Find My iPhone வசதி ஏற்கனவே உள்ளது. திருடர்கள் கையில் உங்கள் போன் கிடைத்தால் எளிதாக அந்த வசதியை நிறுத்திவிடலாம். இனி அந்த வசதியை நிறுத்த ஆப்பிள் ஐடியும், கடவுச்சொல்லும் வேண்டும்.
 AirDrop - உங்கள் ஐபோன்/ஐபேடிலிருந்து அருகிலிருக்கும் இன்னொரு ஐபோன்/ஐபேடிற்கு புகைப்படங்கள், வீடியோக்களை உடனடியாகவும், பாதுகாப்பாகவும் அனுப்பலாம்.
Multitasking - ஒரே சமயத்தில் இரண்டு, மூன்று அப்ளிகேசன்களை மாற்றி, மாற்றி பயன்படுத்தலாம். Home பட்டனை இரண்டு முறை அழுத்தினால் திறந்திருக்கும் அனைத்து அப்ளிகேசன்களையும் காட்டும்.
iTunes Radio - ரேடியோ மூலம் பாடல்கள் கேட்கலாம். உங்களுக்கென்று தனி ரேடியோ ஸ்டேசன் உருவாக்கலாம்.
மேலும் Safari உலவியையும், சிரி (Siri) அப்ளிகேசனையும் மேம்படுத்தியுள்ளது.

இவைகளை விட முக்கியமானதொரு சிறப்பம்சம் ஐஓஎஸ் 7-ல் நேரடியாக தமிழில் எழுத தமிழ் உள்ளீடு வசதி உள்ளது.

ஐஓஎஸ் 7 வெளியீடு:

ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 7-ஆம் பதிப்பை இன்று வெளியிடுகிறது. அமெரிக்க நேரப்படி காலையில் வெளியிடுவதால் அநேகமாக இன்று இரவு 10.30 மணிக்கு வெளியாகலாம்.

எந்தெந்த சாதனங்களில் இதனை பெறலாம்?

iPhone 4 மற்றும் அதற்கு பிந்தைய ஐபோன்கள்
iPod Touch 5th Generation
iPad 2, iPad Retina Display, iPad Mini
இன்றே இதை நிறுவலாமா?

புதிய இயங்குதளத்தை நிறுவும்போது எந்தவித பிரச்சனைகளும் வரலாம். பரவாயில்லை என்றால் உடனே நிறுவலாம். இல்லை என்றால் இரண்டு, மூன்று நாட்கள் காத்திருந்து நிறுவுவது நல்லது.

என்ன செய்ய வேண்டும்?

உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தொடர்பு பட்டியல்களை பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு Settings > General > Software Update பகுதிக்கு சென்று இயங்குதளத்தை அப்டேட் செய்துக் கொள்ளலாம்.



2007க்கு பிறகு ஆப்பிளின் ஒரு திருப்தியான சேவை இந்த ஐ ஓ எஸ் தான். அப்படி ஒரு நேர்த்தி. என்னை போல பல டெவலப்பருக்கு தெரியும் 1 வருடம் முன்பே இது ரெடியானாலும் இதை நன்கு சோதனையோட்டம் செய்தே இன்று லான்ச் செய்திருக்கின்றனர். ஒரு புது ஐ ஃபோனை வைத்திருப்பதை போல் மகிழ்ச்சியான அனுபவம் ஐ ஓ எஸ் 7.

இதன் பயன்கள் பல இருப்பதால் – முக்கியமானதை மட்டும் பார்ப்போம்.

1. முதலில் இதன் கலர்கள் மிகவும் கண்ணை பறிக்கும் வகையில் அமைக்கபட்டிருக்கிரது.

2. ஒவ்வொரு ஐகானும் புது மாதிரி செய்திருக்கிறார்கள், அதனால் அந்த பழைய ஐகான் இல்லவே இல்லை.

3. ஆப் ஸ்வாப் எனப்படும் ஒவ்வொரு ஆப்பின் நடுவே இன்னொரு ஆப்பை இயக்கும் ஸ்மூத் டிரான்ஸிஷன்.

4. ரொட்டேஷன் லாக் ஐ போட் போன்று இதற்க்கு உள்ளதால் இனிமேல் ஆப் சங்கு சக்கரம் மாதிரி சுத்தாது.

5. டூ நாட் டிஸ்டர்ப் – ஒரு செம்மை ஆப்ஸ் – பல பேர் அருகில் இருந்தும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார்கள்.

6. ஏர் டிராப் எனப்படும் ஒரு வசதி நெட்வொர்க்கில் இருக்கும் யாருக்கும் மெயில் இல்லாமலே ஃபைல்களை அனுப்ப முடியும்.

7. சிரி எனப்படும் ஐஃபோனின் சக்காளத்தி இனிமேல் மனித குரலில் பேசும் மற்றூம் உங்கள் குரலை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும்.

8. சஃபாரி பிரவுசர் இனிமேல் ஒரே பிரவுசரில் மற்ற பக்கங்கள் தெரியும் வண்ணம் அது போக ஆட் நியூ பேஜ் தொல்லை இல்லை.

9. கேமரா இன்டர்ஃபேஸ் கலக்கலாய் உள்ளதால் புதுசா படம் பிடிக்கிறவங்க கூட பி சி ஸ்ரீ ராம் கனக்கா பிடிக்கலாம் ரெடி ஆப்ஸ் அதில் டிங்கரிங் பட்டி பார்க்கலாம் வேறு ஆப்ஸ் இல்லாமல்.

10.ஃபோட்டோக்கள் இனிமேல் எந்த எடத்தில் எடுத்தோம் என கவலைஇல்லாமல் மேப்பில் இந்த படங்கள் இங்கே எடுக்கபட்டது என கூறூம். இன்ஸ்டாகிராமும் டோட்டல் சேஞ் ஓவர்

11. ஐ டியூன்ஸ் ரேடியோ – சூப்பர் இலவச ரேடியோ ஆப் மிகவும் குறைந்த பேன்ட்வித்தில் இயங்குகிறது – அதே போல் இதன் உபயோகம் அமெரிக்கா மக்களுக்கு மட்டுமே – கூடிய சீக்கிரம் அனைத்து நாட்டுக்கு தனி தனியே வருகிறது.

12. நோட்டிஃபிக்கேஷன் சென்ட்டர் எனப்படும் தகவல் பலகை – நீங்கள் ரெகுலராய் பார்க்கும் இன்றைய வானிலை / ஷேர் மார்க்கெட் நிலவரம் / மிஸ் கால்ஸ் / அப்பாயின்ட்மென்ட் என அத்தனையும் ஒரே ஆப்ஸில் காட்டும் நல்ல டைம் மேனேஜ்மென்ட் சாஃப்ட்வேர்.

13. ஆப்ஸ் ஸ்டோர் – ஃபைன்ட் மை ஐஃபோன் எனப்படும் ஆப்ஸ் மூலம் தொலைந்த ஃபோன் மற்றூம் அனைத்து ஆப்ஸும் ஒரே இடத்தில் சங்கமம்.

14. கலர்ஃபுல் வால்பேப்பர்ஸ் – மிக அழகாக கண்ணை பறிக்கும் டிரான்ஸ்பரன்ட் மற்றூம் முழு கலர் வால்பேப்பர்ஸ் மிக அற்புதமான சேவை.

15. பேட்டரி லைஃப் – இதில் 11% வரை பேட்டரியை சேமிக்கலாம் என கூறுகின்றனர் ஆனால் டெக்னிக்கள் பர்ஸனாய் இது 3ஜி எஸ் / 4 / 4 எஸ் இதில் முடியாது ஒன்லி ஃபர்ம் ஆப்பிள் 5 அன்ட் 5 எஸ் மட்டுமே முடியும்.
 
Top