ஜோதி ராஜ். தற்பொழுது 22 வயதான கர்நாடக மாநில தமிழ் இளைஞர்.
நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏழ்மையுடன் போராடிக் கொண்டு அன்றாட வருமானத்திற்கென கூலி வேலைகள் செய்துவந்த இவர் தனது திறமையைக் கண்டு கொண்டார். செங்குத்தான மலைப்பாறைகளில், சுவர்களில் மிக வேகமாக ஒரு சிலந்தியைப் போல தன் கைகளையும் கால்களையும் பரப்பி தன்னால் ஏற முடியுமென்பது இலகுவாகத் தனக்கு வாய்த்திருப்பதை அவர் உணர்ந்தார். அதன்படியான தொடர் முயற்சிகளில் அவர் வெற்றியும் கண்டார்.
இப்பொழுது கைகளுக்கோ, உடலுக்கோ எந்தவொரு பாதுகாப்புக் கவசமுமின்றி மிகச் சாதாரணமாகவும் வேகமாகவும் 300 அடி உயரமான செங்குத்தான இடங்களுக்கும் கூட அவர் ஏறிவருகிறார். இந்தச் சாகசத்தைப் பார்க்க வருபவர்கள் தந்துசெல்லும் பணம் அவருக்கு ஒரு வருவாயாக அமைந்திருக்கிறது. இவரின் இந்த சாகசம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.