புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த மேரா ரொஸேல்ஸின் வாழ்க்கையை ஆவணப்படமாக அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பவுள்ளது.
தற்போது 32 வயதான ரொஸேல்ஸ் 2008ஆம்
ஆண்டில் தனது சகோதரியின் மகனான எலிஸியோ மீது வீழ்ந்ததில் மருமகன் உயிரிழந்தார். அப்போது 1028 பவுண்ட் நிறையுடன் (சுமார் 466.2 கி.கி.) மாமிச மலையாக இருந்துள்ளார் ரொஸேல்ஸ்.


இது தொடர்பிலான கொலை வழக்கிலிருந்து கடந்த வருடம் ரொஸேல்ஸ் விடுவிக்கப்பட்டார். தவறுதலாக வீழ்ந்ததில் அதிகபருமனால் உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுள்ளது.

வைத்தியப் பரிசோதனையின் போது எலிஸியோ அழுத்தத்தினால் மரணிக்கவில்லை என்பதுடன் அடித்து தாக்கியதிலேயே மரணமடைந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. விசாரணைகளில் தனது சகோதரி அவரது மகனை தாக்கினார் என ரெஸேல்ஸும் குறிப்பிட்டுள்ளார்.

 தாக்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட ரெஸேல்ஸின் சகோதரிக்கு 15 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தனக்கு ஆபத்தாக முடிந்த உடல் பருமனைக் கட்டுப்படுத்த முயற்சித்த ரொஸேல்ஸ் தற்போது 200 பவுண்கள் (சுமார் 91 கி.கி) எடையைக் குறைத்துள்ளார்.

இந்நிலையில் விடுதலையானதிலிருந்து எடையைக் குறைத்து வரையிலான காலப்பகுதியை அமெரிக்காவின் ரீ.எல்.சி தொலைக்காட்சி ர்யுடுகு- வுழுN முஐடுடுநுசு: வுசுயுNளுகுழுசுஆநுனு எனும் பெயரில் ஒரு மணி நேர ஆவணப்படமாக்கியுள்ளது.

இதனை டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி ஒளிபரப்பவுள்ளது. இது முழுக்க முழுக்க எடைக்குறைப்புடன் சம்மந்தப்பட்ட ஆவணப்படமாகவே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை வழக்கு இடம்பெற்ற காலப்பகுதியில் உயிர் வாழும் அதிக பருமனான பெண்களில் ஒருவராக ரொஸேல்ஸ் பிரபல்யமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Top