புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

எம் வம்சத்தை வளர்க்கவென நடுவினில் பூத்த தவமே,


இல்லற கோபுரத்தின் மணிவிளக்கே, அன்பின் வடிவமே, மனைவி, பிள்ளைகளின் சந்தோசத்தில் பூரிப்படைந்தவனே,

கருணையின் வடிவமே, பண்பின் சிகரமே, உனது அன்பாலும், அரவணைப்பாலும், 

ஆனந்தச் சிரிப்பாலும், அடுத்தவர்களுக்கு கூறும் ஆறுதல் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்தவனே,

நண்பர்களுக்கு நற்பண்பை காட்டியவனே, உம்மை நம்பி நடப்பவர்களுக்கு எதையும் செய்யத்துணிந்த கருணைக் கடலே,


எம்மை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்று பத்தாண்டுகள் அல்ல பத்துகோடி ஆண்டுகள் ஆனாலும் எம் துயர் நீங்காது. 

உமது துயரால் துயருறும் மனைவி,மக்கள்,சகோதர சகோதரிகள் மற்றம் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு என்ன ஆறுதல் சொல்லி உன் அண்ணனால் தேற்றமுடியும்! 

உள்ளத்தில் எவ்வளவு கவலை இருந்தாலும் உதட்டால் சிரி என்று நீ சொன்னவனே, 

உமது ஆனந்த சிரிப்பையும், ஆறுதல் வார்த்தைகளையும், அன்பின் அரவணைப்பையும் மீண்டும்  எந்த ஜென்மத்தில் காண்போம் என்று எண்ணி ஏங்கித்தவிக்கிறோம். 

அதேசமயம் உமது ஆத்மசாந்திக்காகவும் பிரார்த்திக்கிறோம்.

எப்போதும் உம் நினைவுகளோடு வாழ்ந்து வரும் , மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள், மைத்துனர்மார்,பெறாமக்கள்,

தகவல்: பெரியண்ணன் குணேஸ்வரன் பீலபெல்ட் ஜேர்மனி



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top