புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இத்தாலி பலேர்மோ நகரில் இலங்கையரே அதிகளவில் ஆதிக்கம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னைய ஆண்டுகளை விட தற்போது புலம்பெயர் இலங்கையர்களின் எண்ணிக்கை பலேர்மோ நகரில்
அதிகரித்துள்ளதாக அந்நநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நகரின் உள்ளூர் நகராட்சி அறிக்கையின் படி, கிட்டத்தட்ட 30 ஆயிரம் இலங்கையர்கள் பலேர்மோ நகரில் குடியேறியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

2012ம் ஆண்டு இறுதிவரை, 17.1 வீதமான இலங்கையர்கள் குறித்த நகரில் வாழ்ந்து வருகின்றனர். இது 2011ம் ஆண்டைவிட 2 வீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலேர்மோ நகரில் குடியேறியவர்களில் இரண்டாம் இடத்தை பங்களாதேசத்தைச் சேர்ந்தவர்கள் பிடித்துள்ளனர். இவர்கள் 16.4 வீதமான உள்ளனர்.

மேலும், ருமேனியர்கள் 10.9 வீதம், கானான் நாட்டவர் 7.8 வீதம், துனிசியாவை 6.1 வீதம், பிலிப்பைன் 5.7 வீதம், மொராக்கோ 5.1 வீதம் சதவீதம் சீனர்கள் 4 வீதம் பலேர்மோ நகரில் வாழவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top