கர்நாடக மாநிலம், ராம்நகரம் மாவட்டம், பிடதியில் உள்ள தியான பீட ஆசிரமத்தின் மடாதிபதி நித்யானந்தா மீது கர்நாடகாவில் பல வழக்குகள் பதிவாகியுள்ளன.
பொலிஸ் தரப்பு கோரியதை ஏற்ற ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதி அளித்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து ஆண்மை பரிசோதனைக்கு தடை கோரி நித்யானந்தா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் ஆண்மை பரிசோதனை நடத்த தற்காலிக தடை விதித்தது.
இவ்வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல், ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டுள்ளார்.
அதையேற்ற நீதிமன்றம், தற்போதுள்ள தடை உத்தரவு தொடரும் என்று கூறி விசாரணையை ஆகஸ்ட் 20-ம் திகதிக்கு ஒத்தி வைத்தது.
இதற்கிடையில், இவ்வழக்கில் தனது சார்பில் வாதம் முன்வைக்க அனுமதி கோரி நடிகை ரஞ்சிதா தரப்பில் கொடுக்கப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
0 கருத்து:
கருத்துரையிடுக