கனடாவில் தனது சகோதரிகள் இருவரையும் பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 வயது
சிறுவன் நீதிமன்ற உத்தரவின்படி விடுதலை செய்யப்பட்டுள்ளான். கனடா ஆல்பேட்டா லேத்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த குறித்த 12 வயது சிறுவன் அவனது 10 வயது மற்றும் 8 வயது சகோதரிகள் இருவரையும் கடந்த இரு மாதங்களாக பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சிறுவன் மீது முறையற்ற பாலியல் தொடர்பு- பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் குறுக்கீடு போன்ற குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து குறித்த இரு சிறுமிகளும் தொடர்ந்தும் பலமுறை பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணை இளைஞர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொறுப்பான ஒருவரின் மேற்பார்வையின்றி 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் முன்னிலையில் குறித்த சிறுவன் செல்லக்கூடாது என்றும் பெற்றோரின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும் என்றும் நீதிமன்றத்தினால் உத்தரவு வழங்கப்பட்டதை அடுத்து சிறுவன் விடுதலை செய்யப்பட்டான். இது தொடர்பான மேலதிக வழக்கு விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:
கருத்துரையிடுக