புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நெதர்லாந்து வாழ் மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்த ஒன்றுகூடல் எதிர்வரும் ஐப்பசி மாதம் 8ம் திகதி நடைபெறும் என நெதர்லாந்து பண்-முக ஒன்றியம் மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து சிறப்பிக்கும் புதிய 
பற்பல சுவையான நிகழ்ச்சிகளுடனும்,நெதர்லாந்து பண்-முக 
ஒன்றியத்தின் எமது ஊர் நோக்கிய திட்டங்களின் இன்னும் அறியாத 
புதிய புதிய தகவல்களை தாங்கியும் எதிர்வரும் ஒன்றுகூடல் நிகழ்வு அமையும் என்பதையும் பெருமையுடன் அறிவிப்பதோடுநிகழ்ச்சி நிரல் நெதர்லாந்து பண்-முக ஒன்றியத்தால் பின்னர் ஊர்  இணையங்களில் அறியத்தரப்படும்.

நெதர்லாந்து வாழ் ஊரவர்களுடன் பிற ஐரோப்பிய வாழ் உறவுகள் அனைவரையும் இந்த ஒன்றுகூடலில் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் நெதர்லாந்து பண்-முக ஒன்றியம் இரு கரம் கூப்பி தாழ்மையுடன் அழைக்கின்றது.

ஒன்றியம் உருவாக்கி மூன்று மாதங்களில் ஊரை நோக்கி சாதனை படைத்தோம்!
இன்னும் பல சாதனைகள் படைப்போம் படை திரண்டு வாறீர்!

காலம்:   08-10-2011                                                          நேரம்:  14:00 – 22:00
மண்டப விலாசம்:          Speeltuin Vereniging ‘Kindervreugd’
                                                 Hugo de Grootstraat-100
                                                2405 VK Alphen a/d Rijn  


மேலதிக தகவல்களுக்கு:-
சச்சி              064 – 49 31 216
சுதர்சன்       : 062 – 30 89 326
சிவாஸ்       : 063 – 39 31 989


பின்குறிப்பு:
தொலைபேசி தொடர்புகள் ஊடாக தனிப்பட்ட முறையில் அழைப்புகள் விடுக்கப்படாது என்பதை அறியத்தருகிறோம்.
தடைகள் எதுவும் விதிக்கப்படாத ஒன்றுகூடலாக அமையும் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.
உணவுகள்சிற்றுண்டிகள்குடிபானங்கள் உதவிகள் புரிய விரும்பும் உறவுகள் தயவுசெய்து மேற்குறிப்பிட்டவர்களுக்கு முன் கூட்டியே அறிவிக்கும் வண்ணம் அன்புடன் வேண்டப்படுகிறீர்கள்.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top