இதன் மல்டி டச் ஹார்ட்வேர் மல்டிமீடியா சாதனங்களை கட்டுப்படுத்துகிறது. அடுத்த சிறப்பம்சம் என்னவென்றால் இதன் கீறல் வீழாத கொரில்லா கண்ணாடி திரையாகும்.திங்க்பேட் எக்ஸ்-220 ஹைடெபினிஷன் க்ராபிக் சப்போர்ட்டுடன், 2ஜிகாஹெர்ட்ஸ் இன்டல் கோர் ப்ராஸஸரை பெற்றுள்ளது. இதில் க்ராபிக் வேலைகள் செய்வது மிக எளிது. இது பல்திறன் கொண்ட நோட்பேடாகும். இதில் அலுவலக அப்ளிகேஷன்களையும், கான்பரன்சிங் வசதியையும் பெற முடியும்.
தகவல் தொடர்பு வசதிக்காக இதன் கீபோர்டு ஒலி சப்ரஷன் கீகளை கொண்டுள்ளது. மேலும் இதன் கேமரா மூலம் உரையாடல் மற்றும் வீடியோ கான்பரன்ஸ் செய்ய முடியும். ஏற்கனவே கூறியபடி இதன் பேட்டரி திறன் மூலம் மின் இனணப்பு இல்லாமல் தொடர்ந்து 16 மணி நேரம் இதனை இயக்க முடியும்.திங்க்பேட் எக்ஸ்-220 தகவல் பரிமாற்றத்தை 10 மடங்கு அதிக வேகத்தில் வழங்குவதற்காக யுஎஸ்பி 3.0வை வழங்குகிறது. இதன் சேமிப்பு வசதி மிக அலாதியானது.
அதாவது சேமிப்புக்காக 8ஜிபி ரேமையும் 320 ஜிபி டிரைவையும் மற்றும் 160 ஜிபி ஹார்டு டிஸ்க்கையும் பெற்றுள்ளது.
அலுவலக வேலைகளுக்கான அனைத்து அப்ளிகேஷன்களையும் இது வழங்கும்.திங்க்பேட் எக்ஸ்-220 அலுவலக பணியாளர்களை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலதிகாரிகள் எந்த இடத்தில் இருந்தாலும் தங்களுக்கு கீழ் வேலை பார்க்கும் அலுவலகர்களோடு தொடர்பு கொள்ள முடியும். இந்த புதிய லேப்டாப் ரூ. 70,000க்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை ஒரு அலுவலக கணினி என்றும் அழைக்கலாம்.
0 கருத்து:
கருத்துரையிடுக