இலங்கைத்திருநாட்டின் வடபால் அமைந்துள்ள யாழ் நகரின் மேற்குக் கரையோரத்தில் வரலாற்றுப் புகழ் மிக்க சம்பில் துறையை அண்மித்த பண்டத்தரிப்புப் பிரதேசத்தில் செந்நெல் கொழிக்கும் வயல் வெளியுடன் கூடிய சைவமும் தமிழும் தழைத்தோங்கும் அழகிய கிராமங்களான
பனிப்புலம் ,காலையடி,சாந்தை,கலட்டி என்பன தனித்துவம் வாய்ந்தவை ,இங்கு தன்னலமற்ற ஆலயத்தொண்டு புரியும் மக்களே அதிகளவில் உள்ளனர்.இதற்கு எடுத்து காட்டாக வரலாற்று சிறப்புமிக்க பல ஆலயங்கள்
பனிப்புலம் ,காலையடி,சாந்தை,கலட்டி என்பன தனித்துவம் வாய்ந்தவை ,இங்கு தன்னலமற்ற ஆலயத்தொண்டு புரியும் மக்களே அதிகளவில் உள்ளனர்.இதற்கு எடுத்து காட்டாக வரலாற்று சிறப்புமிக்க பல ஆலயங்கள்
இக்கிராமங்களில் சிறப்பித்து நிற்பதை காணலாம் .
குறிப்பாக பனிப்புலம் முத்துமாரியம்மன் ஆலயம் ,சாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் ,காலையடி ஞான வேலாயுதர் ஆலயம் ,போன்றன வரலாற்று சிறப்புமிக்கவை .மேலும் பல ஆலயங்கள் இவ்வூர்களை பெருமைபடுத்தி நிற்கின்றன .இவ்வூர்மக்களின் கலாசாரத்தில் வீரசைவம் மேலோங்கி நிற்பது வீரசைவர்கள் என்ற பெருமையும் இவர்களை சிறப்பித்து அழைக்க காரணம் எனலாம் .(வீர சைவம் என்றால் சிவனை முழுமுதலாக கொண்டவர்கள் );மேலும் வீரசைவர்கள் பல்வேறு தொழில்களில் வல்லமை உடையவர்களாக காணப்படுகின்றனர் ,ஆயினும் இவர்களின் வம்ச தொழிலாக ஆலயதொண்டு செய்தலே என பண்டைய நூல்கள் எடுத்து கூறுகின்றன .அதனையே இன்றுவரைக்கும் பலர் கடைபிடிக்கின்றனர் .
இக்கிராமங்களின் பொருளாதார நிலைமை பற்றி நோக்குவோமாயின் இங்கு பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயமே காணப்படுகிறது .மேலும் சிறு சிறு கைத்தொழில்களும் இங்கு ஊர்மக்களின் ஊக்குவிப்பால் இடம்பெறுகிறது ,மேலும் பல உறவுகள் அயல் நாடுகளில் வேலை வாய்ப்புகளை பெற்று தமது திறமைகளினால் பொருளாதாரத்திற்கு ஆணிவேராக நின்று இக்கிராமங்களை வளம்படுத்துகிறார்கள்.மேலும் இக்கிராமத்தில் வறுமை கோட்பாடு இல்லாது இருக்க பலர் உதவும் கரங்களின் ஊடாக உதவிகள் வழங்கியும் , அவர்களை ஊக்குவிப்பு அளித்தும் வருகின்றனர் .
இக்கிராமங்களின் கல்வி நிலைமை பற்றி ஆராயும் போது இக்கிராமத்தில் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிகம் வாழ்கின்றனர் . பலதுறைகளில் தமது திறமைகளை வெளிக்கொணர்ந்த வண்ணம் உள்ளனர் ,எமது கிராமங்களை இணைக்கும் ஒரு சமூக சேவையாளர்களாகவும்,தம்மை அர்ப்பணித்து உள்ளவர்கள் ஏராளம் ,மேலும் கல்வியறிவை புகட்ட பாடசாலைகள் இங்கு இருப்பது கல்வியின் தேர்ச்சியாளர்களிற்கு இன்னொரு தலைமுறையினரை உருவாக்க வழிவகுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .
மேலும் இக்கிராம மக்களின் பண்பாடு பற்றி நோக்கில் கல்வி கற்றோரை மதிக்கும் பண்பும் ,நேர்மை ,சத்தியம் என்பவற்றிற்கு கட்டுபட்டவர்களாகவும்,உற்றார்களின் நிகழ்வுகளை தமது நிகழ்வுகளாக நடாத்தி அவர்களின் பாராட்டுக்களை பெறுபவர்களாகவும்,பெரியோர்களை மதிக்கும் நல்லெண்ணம் உடையவர்களாகவும் ,நாகரீகமான ஆடை ஆபரணங்களை அணிபவர்களாகவும்,ஒட்டு மொத்தமாக நோக்கில் சிறந்த பண்புடையவர்களாக சமுதாயத்தில் மிளிர்கின்றனர் .
மேலும் சமுதாய வளர்ச்சிகளிற்கு மன்றங்களும் தம்மால் இயன்றளவு பணிகளை மேற்கொள்கிறது .இது இளைஞர்களின் கூட்டு முயற்ச்சியின் விளைவாக சமுதாயத்தில் போற்றப்படும் பெரியோர்களின் வழிகாட்டலின் கீழ் சிறப்பாக இயங்கி வருகின்றது .அத்துடன் அயல் நாட்டில் இருக்கும் உறவுகளிற்கும் ,கிராமத்தில் இருக்கும் உறவுகளிற்கும் தொடர்புகளை பேண இணையங்கள் கிராமத்தின் தளங்களாக சிறந்த பணிகளை செய்கின்றது எனலாம் .
நன்றி
ஆக்கம்
பிறேம் கஜன் குகன்
சாந்தை நெற் இன் வரவு கண்டு மிக்க மகிழ்ச்சி . இணைய நுழைவு வாயில் மிகவும் சிறப்பாக உள்ளது.மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குஉங்கள் ஆதரவுகள் வரவேற்க்கப்படுகின்றன.நன்றி
பதிலளிநீக்குசாந்தை இணையம்
புதுப் பொலிவுடன் புறப்பட்டுவிட்ட சாந்தை இணையத்திற்கு வாழ்த்துக்கள். வாழும் உறவுகளையும்,இணையவாசகர்களையும் பண்பாலும் அறிவாலும் மேலும்
பதிலளிநீக்குவளப்படுத்த அதன் பணி பலமுடன் தொடர வாழ்த்துக்கள்.
அன்புடன் சகோதர இணையம் தீபம்.com (theebam.com)
@அன்புடன் சகோதர இணையம் தீபம்.com (theebam.com)உங்கள் வாழ்த்துக்கும் ,வருகைக்கும் நன்றி ,மேலும் உங்கள் ஆதரவுகள் வரவேற்க்கப்படுகின்றன.
பதிலளிநீக்குசாந்தை இணையம்
weldone saanthai
பதிலளிநீக்கு