புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நவீன காலப்பகுதியில் வாழும் நமக்கு தலைமுடி உதிர்தல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.ஆண்,பெண் இருபாலருக்கும் முடி உதிர்வதில் முக்கிய காரணம் வகிப்பது பொடுகு தொல்லை ஆகும். அதாவது தலை வறட்சி அடைதல் ஆகும்.பொடுகைக் குணப்படுத்த பலவித வைத்திய முறைகள் இருக்கின்றன.இதில் இயற்கை வைத்தியங்கள் முன்னிலையில் நிற்கின்றது.தலையை குளிர்ச்சியாக வைத்திருந்தால் பொடுகு தொல்லை நீங்குவதுடன் முடி உதிர்வு பிரச்சினை ஓரளவு குறைக்கலாம்.


                    
அதற்கு பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுங்கள் :

  • தேங்காயெண்ணை சிறிதளவு பாத்திரத்தில் இட்டு கற்பூரத்தை அதற்குள் போட்டு குழைத்து தலையில் தேய்த்து நன்றாக ஊறும் வரை விட்டு குளிக்கவும்.
  •  பொடுதலைக் கீரையை தண்ணீர் விட்டு மையாக அரைத்து தலைக்கு தேய்த்து நன்றாக ஊறியதும் குளிக்கவும்.
  •  மருதாணி இலையையும் பூவையும் சம அளவு சேர்த்து தண்ணீர் விட்டு மையாக அரைத்து ,எலுமிச்சம்பழச்சாறு கலந்து குழைத்து தலைக்கு தேய்த்து நன்றாக ஊறியதும் குளிக்கவும்.
  •  வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து மையாக அரைத்து, அதனுடன் தயிர், எலுமிச்சம்பழச்சாறு கலந்து குழைத்து தலைக்கு தேய்த்து நன்றாக ஊறியதும் குளிக்க வேண்டும்.
  • கடுக்காய் கொட்டையை மோரில் ஊறவைத்து மைய அரைத்து தலைக்கு தேய்த்து நன்றாக ஊறியதும் குளிக்க வேண்டும் .
  • சிறு பயறு, வெந்தயம் போன்றவற்றை  சம அளவு சேர்த்து தூளாக்கி தண்ணீர் விட்டு மையாக  குழைத்து தலைக்கு தேய்த்து நன்றாக ஊறியதும் குளிக்கவும் . 
  • உளுந்தையும் கடுகையும் சம அளவு சேர்த்து தண்ணீர் விட்டு மைய அரைத்து தலைக்கு தேய்த்து நன்றாக ஊறியதும் குளிக்கவும்.
  •  வேப்பிலையையும். மஞ்சளையும் சம அளவு சேர்த்து தண்ணீர் விட்டு மையாக அரைத்து இரவு படுக்கப் போவதற்கு முன் தலைக்கு தேய்த்து, மஜாஜ் செய்து மறுநாள் காலையில்  குளிக்க வேண்டும்.
  • வசம்பு, குப்பைமேனி இலை, மிளகு மூன்றையும் சம அளவு சேர்த்து தண்ணீர் விட்டு மையாக அரைத்து தலைக்கு தேய்த்து நன்கு ஊறியதும் குளிக்கவும். 
  •   நாட்டு நெல்லிக்காயுடன் சிறிது எலுமிச்சம்பழச் சாரைக் கலந்து குழைத்து இரவு படுக்கப் போவதற்கு முன் தலைக்கு தேய்த்து மஜாஜ் செய்து மறுநாள் காலையில் குளிக்க வேண்டும் .
  • வாரம் ஒரு முறை அரை கப் தயிருடன் ஒரு எலுமிச்சம்பழச் சாறைக் கலந்து குழைத்து அழுத்தமாக தலைக்கு தேய்த்து மஜாஜ் செய்து நன்றாக ஊறியதும் குளிக்க வேண்டும் .
  • வாரம் இரண்டு முறை ஒரு கப் தயிருடன் இரண்டு ஸ்பூன் பயத்தமாவைக் கலந்து குழைத்து அழுத்தமாக தலைக்கு தேய்த்து மஜாஜ் செய்து நன்றாக ஊறியதும் குளிக்க வேண்டும் ,
  •   வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயுடன் முட்டை, எலுமிச்சம்பழச்சாறு இரண்டைக் கலந்து குழைத்து அழுத்தமாக தலைக்கு தேய்த்து மஜாஜ் செய்து நன்றாக ஊறியதும் குளிக்கவும்.    இவ்வாறான வழிகளை  பின்பற்றி முடி உதிர்வை கட்டுப்படுத்தலாமே.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top