புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மகனுக்காக இரண்டாவது கணவர் ராஜனை விட்டு விலகி மீண்டும் முதல் கணவருடன் சேர்ந்து வாழப்போவதாக நடிகை வனிதா தற்போது கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
என் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கருதித்தான்  இரண்டாம் திருமணம் செய்தேன். ஆனால் என் மகன் ஸ்ரீஹரி அப்பா ஆகாஷ் இன்னும் தனியாக தானே இருக்கிறார். நீ எப்படி இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கண்டித்தான்.
அதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.அவசரப்பட்டு தவறு செய்து விட்டதை உணர்ந்தேன்.அவன் அம்மாவை இன்னொருத்தருடன் பார்க்க விரும்பவில்லை என்று புரிந்தது. மகன் எனக்கு முக்கியம். அவனுக்கு விருப்பம் இல்லாத எதையும் இனி செய்வதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.
ராஜனுக்கும் சமீபத்திய பிரச்சினைகள் மன உளைச்சலை ஏற்படுத்தின. இருவரும் உட்கார்ந்து பேசி பிரிவது என முடிவு எடுத்து விலகி விட்டோம். இப்போது என் மகன் ஸ்ரீஹரி என்னுடன் நன்றாக பேசுகிறான் .   நானும் ஆகாஷீ ம் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்குள் பல தடவை சண்டைகள் வந்துள்ளன. அவரை அவமானப்படுத்தி பேசி இருக்கிறேன்.
ஆனாலும் இன்று வரை அவர் இன்னொரு திருமணம் செய்து கொள்ள வில்லை.  இதனால் அவர் மேல் எனக்கு மரியாதை ஏற்பட்டு உள்ளது. நாங்கள் சேர்ந்து வாழ ஆசை இருந்தாலும் நடக்குமா? என்று தெரியவில்லை.
எங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்னுடன் பேச வேண்டும். அதுதான் முக்கியம்.   ஆகாஷ் மேல் நான் வைத்திருந்த காதல் உண்மையானது. அதனால் அவருடன் மீண்டும் என்னால் பேச முடிகிறது.
அவரும் என்னுடன் நன்றாக பேசுகிறார். என் அப்பா விஜயகுமார் மீது நான் மரியாதை வைத்துள்ளேன். அவருடன் பேச ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் அவரை நேரில் சந்திக்க விடாமல் சிலர் தடுக்கின்றனர். அண்ணனும்   சகோதரிகளும்   மீண்டும் நான் குடும்பத்தோடு சேரக்கூடாது என்று  நினைக்கிறார்கள் என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top