புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மனிதனின் வளர்ச்சி ஆனது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும். இதன் உச்சகட்டம் இருபத்தியொரு வயது வரையே மனிதனின் உடலில் ஆயுள் முடியும் வரை வளரும் உறுப்பு காது மட்டுமே. எம்மால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வளரும். அதாவது வளர்ச்சி எப்படி என்றால் ஆயிரம் வருடங்கள் நாம் உயிரோடு இருந்தால் வளரும் காதின் அளவு, ஒரு குட்டியானையின் காது போன்றிருக்கும்.
சராசரியாக மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐந்து லட்சம் என கணிப்பிடபட்டுள்ளது . நமது உடம்பில் உள்ளங்கை மற்றும் பாதங்களின் கீழ் மனிதனின் உடம்பில் மிகவும் வலுவான விஷயம் என்னவென்றால், அது பல்லின் மீது இருக்கும் எனாமல்தான். இது யானையின் தந்தத்தை விட வலுவானது .மனிதனின் கை மட்டும் ஒருநாளைக்கு லட்சக்கணக்கான முறையில் இயங்குகிறது. ஒரு பொருளை எடுக்க நினைத்தவுடன், முப்பது எலும்பு இணைப்புகளும், ஐம்பது தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.மனிதனின் உடம்பில் எல்லா உறுப்புக்களையும் தாங்குவது பாதங்கள் இது ஏறத்தாள 85கிலோ எடைக்கு மேல் தாங்குகிறது.இப்பாதம் மனிதனின் ஆயுள் முடியும் வரை தாங்குகிறது.மனிதனின் இதயம் ஆனது ஒரு நாளைக்கு ஒருலட்சத்திற்கு மேற்பட்ட தடவைகள் துடிக்கும் என கணிக்கபட்டுள்ளது .மனிதனின் உடலை சரி பாதியாக பிரித்தால், இரண்டும் சமமாக இருக்காது! நமக்கும் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு வீடுகளை சுத்தப்படுத்தும் அளவுக்கு குளோரின், மூன்று அவுன்ஸ் கல்சியம், இருபதாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கும் அளவுக்கு பொசுபரஸ் பத்து குளியல் சோப்புகளில் பயன்படுத்தும் கொழுப்பு ஆகியவை இருக்கின்றன . மனிதனின் உடம்பில் இருக்கும் இரும்புச் சத்தை வைத்து இரண்டு அங்குல ஆணி செய்யலாம்! இத்தனை விஷயங்களும் இருபது சதுர அடி தோலுக்கும் கச்சிதமாக அமைந்துள்ளன .ஒரு முழு மனிதனை உருவாக்க அத்தனை விஷயங்களும் டி.என்.ஏ. என்னும் மாலிக்ல் சரத்தின் அமைப்பில் பதிவாகியிருக்கிறது. இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான தகவல்களின் கண்களின் நிறமும் ஒன்று. டி.என்.ஏ.வின் தன்மைக்கு ஏற்ப கண்களின் நிறம் அதாவது விழியின் நிறம் மாறும்.நம்முடைய இரத்தத்தில் சாதாரணமாக நூற்றியிருபது  மில்லிகிராம் குளுகோஸ் இருக்க வேண்டும். இதுதான் பல உறுப்புகளுக்கு சக்தி கொடுப்பது. சாப்பிடும்போது இரத்தத்தில் குளுகோஸ் நூற்றெண்பது வரை இருக்கும். இதன் அளவு இரத்தத்தில் குறையும்போது பசி ஏற்படுகிறது. குளுகோஸ் குறைந்த ரத்தம் மூளைக்கு செல்லும்போது லேசான மயக்கம், காது அடைப்பு, கண்ணை கட்டுவது, அதனால் மயக்கம் ஏற்படுகிறது. நம் உடலில் எப்போதும் கொஞ்சம் அற்ககோல் உள்ளது சர்க்கரை, ஸ்டார்ச் போன்றவற்றில் எப்போதும் ஒரு கிராம் இருக்கும்.கண்ணுக்கு மேலாக மறைவாக லாக்ரிமல் கிளாண்ட் என்று ஒரு சுரப்பி உள்ளது. இந்த சுரப்பி சுரக்கும் லாக்ரிமா என்ற திரவம்தான் கண்ணீர். பொதுவாக விழிக்கோளத்தில் தூசு படும்போது அதை அலம்பி விடுவதுதான் இந்த சுரப்பியின் வேலை. இது தொடர்ந்து இயங்கும்போது நம் கண்ணில் கண்ணீர் வடிகிறது.  கண்மணிகள் கண்பார்வைக்கு வழி வகுக்கிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top