புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

Planet Two Suns
பூமி சுற்றி வரும் சூரியனை விட சிறிய வடிவிலான 2 சூரியன்களையும் அதை சுற்றிவரும் கிரகத்தையும் குறித்த படங்களை கெப்ளர் விண்கலம் படம் பிடித்து அனுப்பியுள்ளது.நாசா மூலம் விண்ணில் ஏவப்பட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் கெப்ளர் விண்கலம் அவ்வப்போது விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தும் படங்களை அனுப்புவது வழக்கம். கெப்ளர் விண்கலம் மூலம் பூமிக்கு அருகில் அல்லது தொலைவில் 

உயிர்வாழ ஏற்ற கிரகம் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறியவே அனுப்பப்பட்டுள்ளது.


இந்நிலையில் சமீபத்தில் கெப்ளர் விண்கலம் அனுப்பியுள்ள படங்கள் மூலம், ஒரு புதிய கிரகத்தையும் 2 சூரியன்களையும் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து 200 ஓளியாண்டு தூரத்தில் உள்ள இந்த கிரகத்திற்கு கெப்ளர் 16பி என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.


இந்த கெப்ளர் 16பி கிரகத்தில் பாதியளவு பாறையும், பாதியளவு வாயுக்களும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இங்கு உயிரினம் வாழ முடியாத நிலையில் உள்ளதாக தெரிகிறது. கிரகத்தின் அளவு ஏறக்குறைய சனிக்கிரகத்தின் அளவையும், 2 சூரியன்களும், பூமியின் சூரியனை விட சிறியவை எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


அதில் 1 சூரியன் பூமியின் சூரியனின் 69 சதவீத அளவையும், மற்றொன்று 20 சதவீத அளவையும் கொண்டுள்ளதாக தெரிகிறது. சூரியக் குடும்பத்தில் உள்ளது போல, சூரியன்கள் தன்னை தானே சுற்றிக் கொண்டே, அந்த கிரகத்தையும் சுற்றி வருகின்றன. இதனால் மூன்றிற்கு இடையே அவ்வப்போது கிரகணங்கள் ஏற்படுகிறது.


ஆனால் இம்மூன்றிற்கும் இடையேயான இயக்க வேகத்தை துல்லியமாக கணக்கிட முடியவில்லை. கெப்ளர் 16பி 2 சூரியன்களையும் சுற்றி வர 229 நாட்களை எடுத்து கொள்கிறது. வெள்ளி கிரகம் சூரியனை சுற்றி வர 225 நாட்களை எடுத்து கொள்கிறது.


கெப்ளர் ஆராய்ச்சியாளர் வில்லியம் புரூக்கி கூறுகையில், "சூரியக் குடும்பத்தை ஒத்த அநேக கிரகங்களும், சூரியன்களும் உள்ளது. அதில் சிலவற்றில் உயிர்வாழ தேவையான அம்சங்கள் அடங்கி இருக்கலாம் என்பதை கெப்ளர் அனுப்பியுள்ள படங்கள் மூலம் நிரூபணமாகிறது. அதன்மூலம் ஆராய்ச்சியாளர்கள் கடக்க வேண்டிய பாதை வெகுதொலைவு உள்ளது என தெரிகிறது", என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top