புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



அமெரிக்காவின் நெவேடாவில் நடைபெற்றுவந்த தேசிய விமான சாகச நிகழ்வின் போது திடீரென விமானமொன்று கட்டுப்பாட்டை இழந்து பார்வையாளர்கள் அமர்ந்திருந்த தரை பிரதேசத்ததில் வீழ்ந்து சுக்கல் சுக்கலாக வெடித்து சிதறியதில் 3 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 50 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  உயிரிழந்தவர்களில் புகழ்பெற்ற ஹாலிவூட் விமான ஸ்டண்ட் ஓட்டுனரும் பலியாகியுள்ளார்.

இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட Era- P-51 எனும் விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.  இயந்திர கோளாறே விமான விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரான்ஸ்டான் எனும் இடத்தில் விமானம் விபத்துக்குள்ளானது.
கலிபோர்னியாவின் ரெனோ விமான சாகச பந்தயம் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இராணுவ மற்றும் பொதுச்சேவைகளுக்கான விமானங்கள், தனியார் விமானங்கள் என பலதரப்பட்ட வகையான விமானங்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சாகசங்கள் நிகழ்த்தி வருகின்றன.

2007,2008 போட்டிகளின் போதும் நான்கு விமானிகள் உயிரிழந்திருந்தனர். பல மாதங்களாக இந்நிகழ்வுக்காக தம்மை தயார் படுத்திக்கொண்ட போதும் எதிர்பாராத விதமாக இவ்வாறான விபத்துக்கள் நிகழ்ந்துவிடுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top